பாலிவுட்டில் முன்னணி நடிகையாக கலக்கி கொண்டு இருக்கிறார் நடிகை டாப்ஸி பன்னு. இவர் தமிழில் 2011 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான ‘ஆடுகளம்’ என்ற படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் அறிமுகமானவர் . அதனைத் தொடர்ந்து நடிகை டாப்சி அவர்கள் தமிழில் பல படங்களில் நடித்துள்ளார். இவருக்கு தமிழில் பட வாய்ப்புகள் குறைய தொடங்கிய உடன் இவர் பாலிவுட்டில் அதிக கவனம் செலுத்த தொடங்கினார். தற்போது டாப்சி அவர்கள் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழி படங்களிலும் கலக்கிக் கொண்டு வருகிறார். இந்நிலையில் நடிகை டாப்சி அவர்கள் வெளிநாட்டு நபரை காதலித்து வருவதாக தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் வதந்திகள் வந்து கொண்டுள்ளன. நடிகை டாப்ஸியும் டென்மார்க்கில் வசிக்கும் பூ பந்து வீரர் மத்தியாஸ் போவும் காதலிப்பது உண்மையானது. மேலும், நடிகை டாப்ஸி அவர்களின் காதலுக்கு இரண்டு பேரின் பெற்றோர்களும் சம்மதம் தெரிவித்ததாக சினிமா வட்டாரத்தில் தகவல் வெளியாகியது.
இந்நிலையில் இது குறித்து நடிகை டாப்ஸிடம் கேட்டபோது அவர் கூறியது, எனக்கும் பேட்மிட்டன் வீரன் மத்யாசுக்கும் இடையே காதல் இருப்பது உண்மைதான். என் குடும்பத்தினர் எங்களுடைய காதலுக்கு சம்மதம் தெரிவித்தால் தான் எங்களுடைய காதல் திருமணத்தின் முடியும். ஒருவேளை எங்கள் பெற்றோர்களின் சம்மதம் கிடைக்காவிட்டால் நாங்கள் எங்கள் காதலை நிராகரித்து திருமணம் செய்து கொள்ள மாட்டோம். பிறகு நாங்கள் இருவருமே அவரவர் வேலைகளை செய்வது என்று முடிவு செய்து இருக்கிறோம்.
இந்த முடிவில் இரண்டு பேருமே உறுதியாக இருக்கிறோம் என்று கூறினார். தற்போது நடிகை டாப்ஸீ அவர்கள் ஹசீனா தில்ருபா, ஷபாஷ் மீத்து உள்ளிட்ட பல படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். டாப்ஸி அவர்கள் தமிழில் அகமது இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் ஜன கண மன என்ற திரைப்படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் ரஹ்மான் மற்றும் கவுதமி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிப்பதாக தெரியவந்துள்ளது.