
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் விஜய் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்து பேசினார். பெண்களை இழிவுபடுத்தும் பேச்சுகளுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த அவர், திமுக ஆட்சிக்கால ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக சர்க்காரியா கமிஷன் மற்றும் ED ஆவணங்களை மேற்கோள் காட்டினார். இதனால் பேரவையில் அமளி ஏற்பட்டு திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

‘சண்டைக்கோழி’ படத்தின் கதையை முதலில் நடிகர் விஜய்யிடம் இயக்குநர் லிங்குசாமி கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. ராஜ்கிரண் கதாபாத்திரம் மிகவும் முக்கியமாக இருப்பதாகவும், அதைத் தாண்டி ஹீரோவுக்கு பெரிய ஸ்கோப் இல்லை என்றும் கருதி விஜய் அந்தக் கதையை மறுத்ததாக கூறப்படுகிறது. பின்னர் விஷால் நடிப்பில் வெளியான இப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. படத்தின் வெற்றிக்குப் பிறகு விஜய் தன்னை பாராட்டியதாகவும் இயக்குநர் லிங்குசாமி தெரிவித்துள்ளார்.

இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து, நடிகர் விஜய்யின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவானால் அதற்கு “நெஞ்சில் குடியிருக்கும்” என தலைப்பு வைக்கலாம் என்று தெரிவித்துள்ளார். இப்படத்தின் முதல் பாதியில் விஜய்யின் திரையுலகப் பயணம் மற்றும் சாதனைகளையும், இரண்டாம் பாதியில் அவரது அரசியல் பயணத்தையும் மையமாகக் கொண்டிருக்கலாம் என அவர் கூறியுள்ளார்.

பரந்தூர் விமான நிலையத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் ஏகனாபுரம் பகுதி விவசாயிகள், தங்களது போராட்டத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்த தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யை நினைவுகூரும் வகையில், ஏகனாபுரம் பிரதான சாலைக்கு ‘ச.ஜோசப் விஜய் சாலை’ என பெயரிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழக அரசின் ‘தாய் மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தில் ஜோய் ஆலுக்கஸ் நிறுவனம் இணைந்து, சமூக சேவை நோக்கில் ஒரு பைசாவுக்கு தங்க மோதிரம் வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முயற்சி பொதுமக்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.

சட்டமன்றத்தில் முதல்வர் விஜய் வெளியிட்டதாகக் கூறப்படும் 3 முக்கிய அறிவிப்புகள் குறித்த தகவல்கள்: இலவச சிலிண்டர் திட்டம், புதிய விமான நிலையம் மற்றும் பெண்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயணம்.

நடிகர் சிலம்பரசன், விஜயின் புகழை விட மக்கள் அவர் மீது வைத்திருக்கும் நம்பிக்கையே மிகப்பெரியது என்று பாராட்டியுள்ளார். விஜயின் அரசியல் பயணம், ஆட்சி மற்றும் எதிர்கால செயல்பாடுகள் குறித்து சிலம்பரசன் தெரிவித்த கருத்துகள் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளன. மேலும், தனது அரசியல் வருகை குறித்தும் காலம்தான் முடிவு செய்யும் என அவர் தெரிவித்துள்ளார்.

சிவகங்கையில் நடைபெற்ற தனியார் பள்ளி விழாவில் மாணவர்களுடன் உரையாடிய விஜய்யின் கை சைகையை NASA விஞ்ஞானி டான் தாமஸ் செய்து காட்டியதாக வெளியான காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. விஜய்யின் தனித்துவமான சைகை NASA விஞ்ஞானி வரை சென்றிருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம்: சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் கொண்டுவந்த தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்!

ரூ.4000 கோடி செலவு செய்தோம் என்று சொன்னீர்களே, சென்னையில் செய்தீர்களா? அல்லது சிங்கப்பூரில் செய்தீர்களா? என்று அதற்கு இப்போது வரை பதில் வரவில்லை - நடிகர் விஷால்

சட்டசபையில நாளைக்கு இருக்கு.! தைரியம் இருந்தால் CM விஜய் பதில் சொல்லட்டும் - எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்

நிர்வாகத் திறனற்ற அரசு - முதலமைச்சர் விஜய் மீது உதயநிதி ஸ்டாலின் கடும் தாக்கு!

“விஜய் அரசியலுக்குப் புதியவராக இருக்கலாம், ஆனால் அவர் ஒரு தைரியமான தலைவர்; அவர் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு” - கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார்

"என் உயிர் உள்ளவரை இந்த நன்றியை மறக்க மாட்டேன்"... முதல்வர் விஜய்க்கு உருக்கமாக நன்றி தெரிவித்த சாந்தனு!

போடாத சாலைக்கு ரூ.3.23 கோடி நிதி? முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிரடி ரெய்டு!



