தாஜ்மஹால் பட நடிகையா இது.! இப்போ எப்படி இருகாங்க பாருங்க.!

0
3685
Tajmahal
- Advertisement -

கிராமத்து கதைகளை எடுப்பதில் வல்லவரான இயக்குனர் பாரதி ராஜா தமிழ் சினிமாவிற்கு பல்வேறு புதுமுகங்களை அறிமுகப்படுத்தியுள்ளார். அந்த வகையில் 1999 ஆம் ஆண்டு இவரது இயக்கத்தில் வெளியான ‘தாஜ்மஹால்’ படத்தின் மூலம் தனது மகன் மனோஜை அறிமுகம் செய்திருந்தார்.

-விளம்பரம்-
View this post on Instagram

Photo @sachin113photographer

A post shared by Riya sen (@riyasendv) on

இதே படத்தில் சொட்ட சொட்ட நனையுது தாஜ்மஹாலு என்ற பாடலில் தோன்றிய ரியா சென்னை யாராலும் மறக்க முடியாது. இந்த படத்தில் மனோஜ்ஜிற்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பெங்கால் மாநிலத்தை சேர்ந்த இவர் ஆரம்ப காலத்தில் மாடலிங் துறையில் ஈடுபட்டிருந்தார்.

- Advertisement -

அதன் பின்னர் இந்தியில் 1999 ஆம் ஆண்டு வெளியான ‘விஷக்கன்யா’ என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இருந்தார். தாஜ் மஹால் படத்திற்கு பின்னர் தமிழில் குட் லக் படத்தில் மட்டும் நடித்திருந்தார். தமிழில் முன்னணி நடிகையாக விளங்கி முடியவில்லை என்றாலும் ஹிந்தியில் பல படங்களில் நடித்துள்ளார்.

மேலும், இந்தி, ஒரியா, பெங்காலி போன்ற பல மொழி படங்களில் நடித்துள்ளார். ரியா சென் கடந்த 2017 ஆம் ஆண்டு சிவம் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னரும் தொடர்ந்து நடித்து வருகிறார் ரியா. தற்போது 38 வயதாகவும் ரியா சென் தற்போதும் இளமை கொஞ்சும் தோற்றத்தில் இருந்து வருகிறார்.

-விளம்பரம்-
Advertisement