சினிமா ஸ்டார் ஆகும் முன் தமன்னா நடித்து இருந்த விளம்பர வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டு இருப்பவர் தமன்னா. இவர் தமிழில் கடந்த 2006 ஆம் ஆண்டு ரவி கிருஷ்ணா நடித்த கேடி படம் மூலம் வில்லியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பரிட்சயமானவர். ஆனால், அதற்கு முன்பாகவே இவர் இந்தி படத்தின் மூலம் சினிமா உலகில் அறிமுகமாகியிருந்தார்.
அதன் பிறகு இவர் தமிழில் பல படங்களில் நடித்து இருக்கிறார். மேலும், இவர் தமிழில் விஜய், அஜித், சூர்யா, விக்ரம், விஷால் என அனைத்து முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து இருக்கிறார். இவர் தமிழ் மொழியில் மட்டுமில்லாமல் ஹிந்தி, தெலுங்கு மற்றும் கன்னடம் என பிற மொழி படங்களிலும் வலம் வந்திருக்கிறார். அதிலும் சில ஆண்டுகளுக்கு முன் தெலுங்கில் வெளியான “பாகுபலி” படத்தின் மூலம் தான் நடிகை தமன்னாவிற்கு சினிமா மார்க்கெட் எங்கேயோ சென்றது.
தமன்னா திரைப்பயணம்:
அதோடு சமீப காலமாகவே இவர் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதையை தேர்ந்து எடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் கடந்த ஆண்டு ஹிந்தியில் தமன்னா நடிப்பில் வந்த படம் பவுன்சர். இந்த படத்தில் இவர் குத்துச்சண்டை வீராங்கனையாக நடித்திருந்தார். இதனை அடுத்து தமன்னா அவர்கள் பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். அதோடு இவர் சில வெப் சீரிஸிலும் நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் ஜீ கர்தா என்ற தொடரிலும் தமன்னா நடித்திருக்கிறார்.
கித்தனா பேருக்கு தெரியும்? pic.twitter.com/Qk0ZdKgagE
— 𝗙𝗶𝗹𝗺 𝗙𝗼𝗼𝗱 𝗙𝘂𝗻 & 𝗙𝗮𝗰𝘁 (@FilmFoodFunFact) August 18, 2023
தமன்னா நடிக்கும் படங்கள்:
மேலும், சமீபத்தில் தமன்னா நடித்த லஸ்ட் ஸ்டோரீஸ் 2 என்ற வெப் தொடர் வெளியாகி இருக்கிறது. இந்த வெப் தொடரில் தமன்னா ரொம்ப இந்த படுக்கை காட்சிகளிலும், முத்த காட்சியிலும் நடித்திருக்கிறார். சொல்லப்போனால், இதுவரை இல்லாத அளவிற்கு இந்த படத்தில் ஓவர் கிளாமராக தமன்னா நடித்திருக்கிறார். தற்போது தமன்னா அவர்கள் நடிகர் ரஜினி நடிப்பில் வெளிவந்த ஜெயிலர் என்ற படத்தில் நடித்திருக்கிறார்.
ஜெயிலர் படம்:
இந்த படத்தில் தமன்னா ஆடி இருந்த காவாலா பாடல் ரசிகர்கள் மத்தியில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி இருக்கிறது. இந்த படத்தை நெல்சன் இயக்கி இருக்கிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இந்த படத்திற்கு யூடுயூப் விமர்சகர்களும், பிரபலங்கள், ரசிகர்கள் என எல்லோருமே பாசிட்டிவான கமெண்ட்களை கொடுத்து வருகிறார்கள். ஜெயிலர் படம் வெளியான ஒரு வாரத்திலேயே உலகம் முழுவதும் 375 கோடிக்கு அதிகமான தொகையை வசூலித்து இருக்கிறது. இதனால் ஜெயிலர் படக்குழு மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறது.
தமன்னா நடித்த விளம்பர வீடியோ:
அது மட்டும் இல்லாமல் தமிழ் சினிமாவிலேயே இதுவரை செய்யாத வசூல் சாதனை முதல் வாரத்திலேயே ஜெயிலர் படம் செய்திருப்பதாக சன் பிக்சர்ஸ் நிறுவனமே சோசியல் மீடியாவில் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. இந்த நிலையில் இசை வெளியீட்டு விழாவில் தமன்னா பேசி இருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேடையில் தமன்னா, நான் இப்போது பிரபலமான ஸ்டாராக இருக்கிறேன். இதற்கு முன் நான் வீட்டுக்கு வீடு சன் டைரக்ட் என்ற விளம்பரத்தில் நடித்திருந்தேன் என்று பேசி இருந்தார். தற்போது தமன்னா நடித்த அந்த சன் டைரக்ட் விளம்பரத்தை பகிர்ந்து எப்படி ஒரு அபூர்வமான வளர்ச்சி என்று வைரலாக்கி வருகிறார்கள்.