இப்படி ஒரு விளம்பரத்தில் நடித்த நீங்க இத சொல்றீங்களா ? தமன்னாவை வெளுத்து வாங்கிய நெட்டிசன்கள்.

0
1757
tamanna
- Advertisement -

தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை தம்மனா. தமிழில் இவர் விஜய், அஜித், சூர்யா என பல முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து உள்ளார். இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெங்லுகு, கன்னடம், ஹிந்தி என்று பல மொழிகளில் ஒரு ரௌண்டு கட்டி வருகிறார். இந்நிலையில் நடிகை தமன்னா அவர்கள் சோசியல் மீடியாவில் சமூக கருத்து ஒன்றை பதிவிட்டு உள்ளார். தற்போது அது ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது. அமெரிக்காவில் கள்ள நோட்டுப் புழக்கம் தொடர்பான விசாரணையில் கருப்பினத்தைச் சார்ந்த ஜார்ஜ் ப்ளாய்ட் என்னும் நபரை போலீஸாரால் கழுத்து நெருக்கி கொடூரமாக கொன்றார்கள்.

-விளம்பரம்-

இந்த சம்பவத்தால் அமெரிக்கா முழுவதும் போராட்டம் வெடித்துள்ளது. இதற்காக ஹாலிவுட் பிரபலங்கள் தொடங்கி பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். அதே போல் சமீபத்தில் கேரளாவில் கர்ப்பமான யானை ஒன்றின் மரணம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு அரசியல் கட்சியினர், தொழில்துறை பிரபலங்கள், திரையுலக பிரபலங்கள் என பலரும் கடும் எதிர்ப்பைத் தெரிவித்து வருகிறார்கள்.

- Advertisement -

இந்நிலையில் இந்த இரண்டு சம்பவத்தையும் சேர்த்து தனது எதிர்ப்பை எதிரிவிக்கும் வகையில் தமன்னா அவர்கள் கருத்து ஒன்று பதிவு செய்துள்ளார். இது குறித்து அவர் கூறியது, உங்கள் அமைதி உங்களைப் பாதுகாக்காது. உலகில் ஒவ்வொரு உயிரும் முக்கியமல்லவா? அது மனிதனாக இருந்தாலும் சரி, விலங்காக இருந்தாலும் சரி. எந்தவொரு படைப்பையும் அழிப்பது உலகளாவிய சட்டத்திற்கு எதிரானது.

நாம் மீண்டும் மனிதனாக இருக்க கற்றுக்கொள்ள வேண்டும். இரக்கத்தை வெளிப்படுத்தி அன்பைக் கடைப்பிடிக்க வேண்டும். எல்லா உயிரும் முக்கியம். உலகமே விழித்திடு என்று கூறியுள்ளார். இப்படி இவர் கூறி முகத்தில் கருப்பு சாயத்தை பூசிய புகைப்படத்தையும் பதிவிட்டு உள்ளார். இந்தபதிவை கண்ட சிலர் தமன்னாவை பாராட்டினாலும் பலர் தமன்னாவை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

-விளம்பரம்-

அதற்கு முக்கிய காரணம நிற பாகுபாடு பற்றி பேசிய தமன்னா பேர் அன் லவ்லி விளமபரத்தில் நடித்தது தான் நெட்டிசன்கள் தமன்னாவை விமர்சிப்பதற்கு காரணமாக மாறியுள்ளது. இதனால் தமன்னா, வெள்ளையாக இருப்பதே அழுகு என்று ஊக்குவிக்கும் பேர் அன் லவ்லி விளாமரத்தில் நடித்த புகைப்படத்தை பதிவிட்டு, இதுபோன்ற விளம்பரத்தில் நடித்துவிட்டு எப்படி கருப்பு நிற மக்களுக்கு ஆதரவு தெரிவிர்கிரீர்களா என்று தமன்னாவை வறுத்தெடுத்து வருகின்றனர்.

Advertisement