ஜிம் உடையில் மழையில் சொட்ட சொட்ட நனைந்தபடி ஒர்க் அவுட் செய்த தமன்னா – வைரலாகும் புகைப்படம்.

0
21584
tamanna
- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகை தமன்னா. ரவி கிருஷ்ணா நடிப்பில் வெளியான கேடி படத்தில் கேடியான ஒரு கதாபாத்திரத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை தமன்னா. பால் டப்பாவை போன்ற இவரது அழகை கண்டு இவருக்கென்று ஒரு தனிப்பட்ட ரசிகர்கள் பட்டாளமே உருவானது.

-விளம்பரம்-
https://www.instagram.com/p/CCvtVVypOeu/

கேடி படத்தைத் தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்த தமன்னா, பின்னர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான விஜய் அஜித் சூர்யா என்று பல்வேறு நடிகர்களுடன் கைகோர்த்து நடித்துவிட்டார். மேலும் ,தமிழ் தெலுங்கில் மட்டுமல்லாது பாலி விட்டுவிடும் தனது என்ட்ரியை கொடுத்திருந்தார் தமன்னா.இடைப்பட்ட காலங்களில் பட வாய்ப்புகள் சரியாக அமையாமல் இருந்த தமன்னாவிற்கு பாகுபலி திரைப்படம் மிகப்பெரிய திருப்புமுனை படமாக அமைந்திருந்தது.

- Advertisement -

அந்த படத்திற்கு பின்னர் அம்மணியின் மார்க்கெட் படுஜோராக சூடுபிடித்து விட்டது. ஆனால், தமிழில் இறுதியாக இவர் நடித்த எந்த படங்களும் வெற்றி பெறவில்லை. இறுதியாக தெலுங்கில் பிரம்மாண்ட செலவில் உருவான சைரா நரசிம்ம ரெட்டி படத்தில் நடித்திருந்தார். மேலும், நயன்தாரா ஸ்டைலில் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படத்திலும் நடித்து வருகிறார் நடிகை தமன்னா.

https://www.instagram.com/p/CAdDFi6nhPL/

சமீபத்தில் விஷால் நடிப்பில் வெளியான ‘ஆக்ஷன்’ படத்தில் நடிகை தமன்னா பிகினி உடையில் தோன்றி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தார். அதே போல யோகா, உடற்பயிற்சிகளை செய்து உடலை கட்டுக்கோப்பாக வைத்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் மழையில் உடைபயிற்சி செய்து அந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement