தமன்னா வாங்கிய புதிய வீடு.! ஒரு சதுரு அடியே இவ்வளவா.! கேட்டா ஷாக்காவீங்க.!

0
1102
Tamanna
- Advertisement -

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகை தமன்னா . தமிழில் கடந்த 2006 ஆம் ஆண்டு ரவி கிருஷ்ணா நடித்த ‘கேடி ‘படத்தின் மூலம் வில்லியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பரிட்சயமானவர் நடிகை தமன்னா.

-விளம்பரம்-
Actress Tamannaah

ஆனால், அதற்கு முன்பாகவே 2005 ஆம் ஆண்டு இந்தியில் அறிமுகமாகியிருந்தார். தற்போது தமிழில் முன்னணி நடிகையாக விளங்கி வருகிறார். தமிழில் விஜய், அஜித், சூர்யா, விக்ரம் என்று அனைத்து முன்னணி நடிகர்களுடன் நடித்த நடிகை தமன்னா, ஹிந்தி சினிமா விடும் ஒரு அலட்சியமான நடிகையாக விளங்கி வருகிறார் .

- Advertisement -

இடைப்பட்ட காலத்தில் வாய்ப்புகள் இல்லாமல் இருந்து வந்த நடிகை தமன்னாவிற்கு, பாகுபலி திரைப்படம் பெரும் திருப்புமுனையாக அமைந்தது. தமன்னா. அதேபோல சினிமா நடிகர்களுடன் இதுவரை எந்த ஒரு காதல் கிசுகிசுவிலும் நடிகை தமன்னா சிக்கி வில்லை என்றாலும் தமன்னாவின் உடல் அமைப்பு அடிக்கடி கேலி கிண்டலுக்கு உள்ளாகி விடுகிறது.

அதே போல நடிகை தமன்னா தற்போது அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராகவும் திகழ்ந்து வருகிறார். இந்த நிலையில் மும்பை, அந்தேரியில் உள்ள லோகண்ட்வாலா அடுக்குமாடி குடியிருப்பில் தற்போது வசித்து வருகிறார். இவர் வடமேற்கு மும்பையில் உள்ள வெர்சோ வாவில் புதிய வீடு ஒன்றை வாங்க, பிரபல பில்டர் சமீர் போஜ்வானியிடம் ஒப்பந்தம் செய்திருக்கிறார்.

-விளம்பரம்-

பே வியூ’ என்ற பெயர் கொண்ட, 22 மாடிகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் 14 வது தளத்தை வாங்கி இருக்கிறார் தமன்னா. இந்த வீட்டின் ஒரு சதுர அடி விலை ரூ.80,778. இது, வழக்கமாக அந்தப் பகுதியில் இருக்கும் விலையை விட இரண்டு மடங்கு அதிகம் என்று கூறப்படுகிறது. அவர் 192 சதுர அடிக்கு 16.6 கோடி ரூபாய் கொடுத்திருக்கிறார் என்றும் பத்திரப் பதிவுக்கு மட்டும் 99.60 லட்சம் செலவழித்திருக்கிறார் என்றும் மும்பை செய்திகள் கூறுகின்றன. அவர் மொத்தமாக 2 ஆயிரம் சதுர அடிக்கு மேல் வாங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது.

Advertisement