ஈஷாவில் நடந்த சிவராத்திரி கொண்டாட்டம் – பரவச ஆட்டம் போட்ட தமன்னா. வைரலாகும் வீடியோ இதோ.

0
873
tamanna
- Advertisement -

இந்தியா முழுவதும் நேற்று இரவு மஹா சிவாரத்திரி கொண்டாடடப்பட்டது. முக்கியமாக கோவையில் உள்ள ஜக்கி வாசுதேவின் ஈஷா யோகா மையம் சார்பில் மிகப்பெரிய சிவராத்திரி விழா முன்னெடுக்கப்பட்டது. ஈஷா யோகா மையம் துவங்கப்பட்ட நாளில் இருந்தே ஆண்டு தோறும் இங்கே சிவ ராத்திரி பூஜை கோலாகளமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதே போல சிவராத்திரி பூஜை என்ற பெயரில் இங்கே நடக்கும் கூத்துக்குள் கொஞ்சம் நஞ்சம் இல்லை.

-விளம்பரம்-

அந்த வகையில் நேற்றும் ஈஷா யோகா மையத்தில் சிவராத்திரி பூஜை படு கோலாகளமாக நடைபெற்றது. இதில் பல்வேறு சிவ பகதர்கள் கலந்து கொண்டனர். அதே போல தென்னிந்திய சினிமாவில் உள்ள பல்வேறு நடிகைகளும் சத்குருவின் பக்கதர்களாக தான் இருந்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக தமன்னா, காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், சமந்தா என்று பல்வேறு நடிகைகள் சத்குருவின் மிகுந்து பக்தைகள் தான்.

- Advertisement -

அதிலும் குறிப்பாக இவர்கள் அனைவரும் சிவராத்திரி பூஜைகளில் தவறாமல் விசிட் அடித்துவிடுவார்கள். அந்த வகையில் நேற்று நடைபெற்ற சிவராத்திரி கொண்டாடத்தில் பல நடிகர் , நடிகைகள் கலந்துகொண்டனர். ஆனால், இந்த ஆண்டு சமந்தா, காஜல் அகர்வால் போன்றவர்கள் கலந்துகொள்ளவில்லை. சமீபத்தில் தான் காஜல் அகர்வாலுக்கு குழந்தை பிறந்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அதனால் இந்த ஆண்டு அவர் வரவில்லை. அதே போல நடிகை சமந்தா கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வருகிறார். அதனால் அவரும் இந்த ஆண்டு வரவில்லை. ஆனால், இந்த முறையும் தவறாமல் சிவராத்திரியில் ஈஷாவிற்கு விசிட் அடித்து இருக்கிறார் தமன்னா. நடிகை தமன்னா ஜக்கி வாசுதேவ் உடன் உற்ச்சமாக நடனமாடிய வீடியோ காட்சிகளும் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகின்றன.

-விளம்பரம்-

மேலும், தமன்னா இந்த முறை பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவுடன் தான் ஈஷா யோகாவிற்கு வந்து இருந்தார். நடிகை தமன்னா பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவை காதலித்து வருவதாக கிசுகிசுக்பட்டு இருந்தது. இந்த ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது விஜய் வர்மாவுக்கு தமன்னா லிப் லாக் அடித்த வீடியோ காட்சி ஒன்று சமூக வலைதளத்தில் வைரலானது. இதனால் இவர்கள் இருவரும் கதைப்பதாக ரசிகர்கள் உறுதி செய்தனர்.

இப்படி ஒரு நிலையில் தமன்னா,விஜய் வர்மாவுடன் ஈஷாவிற்கு வந்து இருப்பது இவர்கள் காதலை மீண்டும் ஊர்ஜிதப்படுத்துவது போன்றே இருக்கிறது. இது ஒருபுறம் இருக்க தமன்னா மட்டுமல்லாது நடிகைகள் மிருணாளினி ரவி, மேகா ஆகாஷ் மற்றும் மம்தா மோகன் தாஸ் உள்ளிட்ட பல நடிகைகள் நேற்று நடைபெற்ற ஈஷா யோகா மைய மகாசிவராத்திரி விழாவில் கலந்து கொண்டனர். இதுகுறித்த புகைப்படங்களை தங்கள் சமுக வலைதளத்தில் பதிவிட்டு இருக்கின்றனர்.

Advertisement