பொதுவாகவே சினிமாவில் நடிக்கும் நடிகர், நடிகைகள் தங்களுடைய அழகு குறித்தும், உடல் பிட்னஸ் குறித்தும் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள். ரசிகர்களும் அதை தான் விரும்புகிறார்கள். அதனால் தான் நடிகர், நடிகைகள் சினிமாவில் நீண்ட நாள் நிலைத்து இருக்க முடிகிறது. மேலும், நடிகர், நடிகைகள் தங்களுடைய உடல் எடையை ஃபிட்டாக வைத்திருக்க பல்வேறு முயற்சிகளை செய்வார்கள். அதிலும் குறிப்பாக ஹீரோயின்கள் தங்களுடைய அழகும், உடல் எடையும் குறித்து அதிக கவனம் செலுத்துவார்கள். அதற்காக பல்வேறு விஷயங்களை செய்வார்கள். இது அனைவருக்கும் தெரிந்ததே. அந்த வகையில் சினிமா துறையில் 10 ஆண்டுகளுக்கு மேலாக ஹீரோயின்கள் நிலைத்து நிற்பது என்பதெல்லாம் சாதாரண விஷயம் அல்ல.
தென்னிந்திய சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகையாக இருந்து வருகிறார் நடிகை தம்மனா. தமிழில் கடந்த 2006 ஆம் ஆண்டு ரவி கிருஷ்ணா நடித்த ‘கேடி ‘படத்தின் மூலம் வில்லியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பரிட்சயமானவர் நடிகை தமன்னா. ஆனால், அதற்கு முன்பாகவே 2005 ஆம் ஆண்டு இந்தியில் தமன்னா அறிமுகமாகியிருந்தார். தமிழில் விஜய், அஜித், சூர்யா, விக்ரம் என அனைத்து முன்னணி நடிகர்களுடன்படத்தில் நடித்து உள்ளார். சில ஆண்டுகளுக்கு முன் தெலுங்கில் வெளியான “பாகுபலி” படத்தின் மூலம் தான் நடிகை தம்மனாவிற்கு சினிமா மார்க்கெட் எங்கேயோ சென்றது.
தற்போது நடிகை தமன்னா தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழி படங்களில் பிசியாக நடித்து வருகிறார். சமீப காலமாகவே இவர் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்ந்து எடுத்து நடித்து வருகிறார். இவர் சினிமா உலகில் நுழைந்து பதினைந்து வருடங்களுக்கு மேல் ஆகிறது. அப்படி இருந்தும் தன்னுடைய உடலை ஒல்லியாகவும், பிட்டாகவும் வைத்து உள்ளார். இவர் தன்னுடைய உடலை ஃபிட்டாக வைத்துக் வைத்திருப்பதற்கு மற்றவர்களைப் போல அரிசி சோறு, முட்டை, கறி, மீன் போன்றவற்றை எல்லாம் சாப்பிடாமல் இருந்ததில்லை. எதையும் அளவோடு சாப்பிட்டால் உடலுக்கு நல்லது என்ற பழமொழிக்கு ஏற்ப திகழ்ந்து வருகிறார் நடிகை தமன்னா.
இந்நிலையில் நடிகை தமன்னா அவர்கள் தன்னுடைய அழகு குறித்தும், பிட்னஸ் குறித்தும் மற்றவருக்கு டிப்ஸ் கொடுத்து இருக்கிறார். அரிசி சோறு சாப்பிடுவது தொடங்கி தண்ணீர் வரை பல விஷயங்களைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு அட்வைஸ் கொடுத்திருக்கிறார் தமன்னா. உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு என்னென்ன உணவு உட்கொள்ள வேண்டும் என அது சம்பந்தமான புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் தமன்னா. அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. மேலும், ரசிகர்கள் பிட்டாக இருக்க விரும்பினால் தமன்னாவின் அட்வைஸ்களை பின்பற்றுங்கள் என்று கருத்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.