‘அப்போ என்னால சிறுத்தை சிவாகிட்ட அத சொல்ல முடியல’ – வீரம் படத்தில் அஜித்தின் லுக் குறித்து பேசிய தமன்னா.

0
2920
Tamannah
- Advertisement -

வீரம் படத்தில் நடித்தது குறித்து ரசிகர்கள் செய்த கிண்டலுக்கு தமன்னா கொடுத்திருக்கும் பதில் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டு இருப்பவர் தமன்னா. இவர் தமிழில் கடந்த 2006 ஆம் ஆண்டு ரவி கிருஷ்ணா நடித்த கேடி படம் மூலம் வில்லியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பரிட்சயமானவர். ஆனால், அதற்கு முன்பாகவே இவர் இந்தி படத்தின் மூலம் சினிமா உலகில் அறிமுகமாகியிருந்தார்.

-விளம்பரம்-

அதன் பிறகு இவர் தமிழில் பல படங்களில் நடித்து இருக்கிறார். மேலும், இவர் தமிழில் விஜய், அஜித், சூர்யா, விக்ரம், விஷால் என அனைத்து முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து இருக்கிறார். இவர் தமிழ் மொழியில் மட்டுமில்லாமல் ஹிந்தி, தெலுங்கு மற்றும் கன்னடம் என பிற மொழி படங்களிலும் வலம் வந்திருக்கிறார். அதிலும் சில ஆண்டுகளுக்கு முன் தெலுங்கில் வெளியான “பாகுபலி” படத்தின் மூலம் தான் நடிகை தமன்னாவிற்கு சினிமா மார்க்கெட் எங்கேயோ சென்றது.

- Advertisement -

தமன்னா திரைப்பயணம்:

அதோடு சமீப காலமாகவே இவர் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதையை தேர்ந்து எடுத்து நடித்து வருகிறார். கடந்த ஆண்டு ஹிந்தியில் தமன்னா நடித்திருந்த படம் பப்ளி பவுன்சர். இந்த படத்தில் இவர் குத்துச்சண்டை வீராங்கனையாக நடித்திருந்தார். இதனை அடுத்து தமன்னா அவர்கள் பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். அதோடு இவர் சில வெப் சீரிஸிலும் நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் ஜீ கர்தா என்ற தொடரிலும் தமன்னா நடித்திருக்கிறார்.

தமன்னா நடிக்கும் படங்கள்:

மேலும், சமீபத்தில் தமன்னா நடித்த லஸ்ட் ஸ்டோரீஸ் 2 என்ற வெப் தொடர் வெளியாகி இருக்கிறது. இந்த வெப் தொடரில் தமன்னா ரொம்ப கவர்ச்சியாகவும், படுக்கை காட்சிகளிலும், முத்த காட்சியிலும் நடித்திருக்கிறார். சொல்லப்போனால், இதுவரை இல்லாத அளவிற்கு இந்த படத்தில் ஓவர் கிளாமராக தமன்னா நடித்திருக்கிறார். இது குறித்து சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சை எழுந்திருக்கிறது. இதனை அடுத்து தற்போது தமன்னா அவர்கள் நடிகர் ரஜினி நடிப்பில் உருவாகி இருக்கும் ஜெயிலர் என்ற படத்தில் நடித்திருக்கிறார்.

-விளம்பரம்-

வீரம் படம் குறித்து சொன்னது:

இந்நிலையில் வீரம் படம் குறித்து சமீபத்தில் தமன்னா அளித்து இருக்கும் பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, தமன்னா அவர்கள் அஜித் நடிப்பில் வெளிவந்திருந்த வீரம் படத்தில் நடித்திருந்தார். இந்த படம் 2014 ஆம் ஆண்டு வெளியாகியிருந்தது. இந்த படம் வெளியான போது அஜித்திற்கு தமன்னா ஜோடியாக தெரியவில்லை. ஏதோ மகள் போல தெரிகிறார் என்ற விமர்சனங்களும் எழுந்தது.

தமன்னா அளித்த பதில் :

இப்படி ஒரு நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற தமன்னாவிடம் ‘வீரம் படத்தில் அஜித் அவர்கள் முதல் ஆதியில் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் தாடி வைத்துகொன்டு மாஸாக இருப்பார். ஆனால், இரண்டாம் பாதியில் ஷேவ் எல்லாம் செய்து ஒரு மாதிரி இருப்பார். அப்போது எங்களுக்கே ‘கொஞ்சம் கருப்பு முடில வந்து இருந்தா வயசு இன்னும் பொருந்தி இருக்குமே’ என்று தோன்றியது. ஒரு ஹீரோயினாக ஒருவேளை நீங்கள் அந்த படத்தின் இயக்குனர் சிறுத்தை சிவாவிடம் ‘சார் டை அடித்து இருந்தால் நன்றாக இருக்குமே என்று கேட்க முடியுமா ? என்று கேள்வி எழுப்பப்பட்டது.

எனக்கு அந்த சுதந்திரம் இல்லை :

இதற்கு பதில் அளித்த தமன்னா ‘ இப்போதுகேட்க முடியும். ஆனால், ஆரம்ப காலத்தில் எனக்கு அந்த சுதந்திரம் இல்லை. ஒரு நடிகர் என்றால் ஒரு நல்ல இடத்திற்கு வந்த பிறகு தான் அதற்கான பதில் கொடுக்க முடியும். ஒரு சில துறைகளில் சிலர் வெளிப்படையாக பேசி விடுவார்கள் சில இயக்குனர்கள் அந்த உரிமையை கொடுக்கிறார்கள் ஆனால் சிலர் அந்த இடத்தை கொடுக்க மாட்டார்கள் உங்களுக்கான இடம் இல்லை என்றால் அந்த வாய்ப்பை நீங்கள் தவிர்த்து விடுங்கள்’ என்று கூறியுள்ளார்.

Advertisement