கிரிப்டோகரன்சி மோசடி விவகாரம் தொடர்பாக நடிகை தமன்னா கொடுத்திருக்கும் விளக்கம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. புதுச்சேரியில் நடந்த கிரிப்டோகரன்சி மோசடி சம்பவம் தொடர்பான செய்தி தான் ட்ரெண்டிங் ஆகி இருக்கிறது. புதுச்சேரியில் கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்தால் அதிகமாக லாபம் கிடைக்கும் என்று ஆசை வார்த்தை எல்லாம் சொல்லி 10 பேரிடம் மூன்றரை கோடி வரை மோசடி செய்யப்பட்டிருக்கிறது.

மேலும், இது தொடர்பாக லாஸ்பேட்டையை சேர்ந்த முன்னாள் அரசு ஊழியர் அசோக் என்பவர் போலீசில் புகார் அளித்திருக்கிறார். அதில் அவர், கிரிப்டோகரன்சியின் தலைமையகம் கோவையில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது. ஆன்லைன் மூலம் 98 லட்சம் வரை கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்திருக்கிறேன். இந்த நிறுவனம் தான் மோசடியில் ஈடுபட்டிருக்கிறது. சினிமாவில் முன்னாடி நடிகைகளாக இருக்கும் தமன்னா, காஜல் அகர்வால் ஆகியோர் இந்த நிறுவனத்தின் நிகழ்ச்சிகளில் பங்கேற்று இருக்கிறார்கள்.
கிரிப்டோகரன்சி மோசடி:
அதோடு இவர்கள் இந்த நிறுவனத்தை விளம்பரப்படுத்தியும் இருக்கிறார்கள். இதனால் தமன்னாவிற்கு 25 லட்சம், காஜல் அகர்வாலுக்கு 18 லட்சம் ரூபாயும் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த கிரிப்டோகரன்சி மோசடியில் நடிகைகள் தமன்னா, காஜல் அகர்வாலுக்கும் தொடர்பு இருக்கிறது. இதனால் இவர்களிடமும் விசாரணை நடத்த வேண்டும் என்று கூறியிருக்கிறார். இதை அடுத்து புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி இருக்கிறார்கள்.

போலீஸ் விசாரணை:
அப்போது கிரிப்டோகரன்சி மோசடி கும்பலை சேர்ந்த கும்பலை நிதிஷ் குமார் ஜெயின், அரவிந்த் குமார் ஆகியோரை கைது செய்து இருக்கிறார்கள். இதை அடுத்து காவல்துறையினர் தமன்னா, காஜல் அகர்வாலுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்த இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது இந்த விவகாரம் இணையத்தில் மிகப்பெரிய அளவில் வைரலாகி இருக்கிறது. இந்நிலையில் இது தொடர்பாக நடிகை தமன்னா அறிக்கை ஒன்று வெளியிட்டார்.

தமன்னா விளக்கம்:
அதில் அவர், கிரிப்டோகரன்சி மோசடி வழக்கில் எனக்கு தொடர்புபதாக சோசியல் மீடியாவில் செய்திகள் வெளியாகி இருப்பதை பார்த்தேன். இது எல்லாமே வதந்தி, பொய்யான செய்திகள். தயவு செய்து தவறான தகவல்களை பரப்புவதை நிறுத்த வேண்டும் என்று சோசியல் மீடியாவில் உள்ள நண்பர்களிடம் கேட்டுக்கொள்கிறேன். இதேபோன்று என்னைப் பற்றி அவதூறான செய்திகள் பரவி வந்தால் சட்ட நடவடிக்கைகளை என்னுடைய குழுவினர் எடுக்க நேரிடும் என்று கூறியிருக்கிறார்.

தமன்னா குறித்த தகவல்:
தென் இந்திய சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் தமன்னா. இவர் தமிழில் நடிப்பதற்கு முன்பாகவே ஹிந்தி படங்களில் மூலம் சினிமாவில் அறிமுகமாகி இருந்தார். அதன் பிறகு இவர் தமிழில் பல படங்களில் நடித்திருக்கிறார். மேலும், இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழி படங்களில் பிசியாக நடித்து கொண்டு வருகிறார். தற்போது இவர் படங்களில் நடிப்பது மட்டும் இல்லாமல் கவர்ச்சி பாடலுக்கும் நடனம் ஆடி வருகிறார்.






