சமந்தாவின் பாடலை ஓரங்கட்டி தள்ளும் அளவிற்கு நடிகை தமன்னாவின் குத்தாட்ட வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் பயங்கர வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகை தமன்னா. ரவி கிருஷ்ணா நடிப்பில் வெளியான கேடி படத்தின் மூலம் தான் இவர் தமிழ் மொழியில் அறிமுகமானார். இதனை தொடரந்து இவர் விஜய், அஜித் என பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து இருக்கிறார். மேலும், இவர் தமிழ் மொழி மட்டுமில்லாமல் ஹிந்தி, தெலுங்கு மற்றும் கன்னடம் என பிற மொழி படங்களிலும் வலம் வந்திருக்கிறார்.
அதிலும் சில ஆண்டுகளுக்கு முன் தெலுங்கில் வெளியான “பாகுபலி” படத்தின் மூலம் நடிகை தம்மனாவிற்கு சினிமா மார்க்கெட் எங்கேயோ சென்றது என்று சொல்லலாம். தற்போது நடிகை தமன்னா தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழி படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இப்படி ஒரு நிலையில் நடிகை தமன்னா அவர்கள் தெலுங்கில் ஒரு பாடலுக்கு நடனமாடியிருக்கிறார். கிரண் கொரபாட்டி ‘கனி’ என்ற படத்தில் தான் நடிகை தமன்னா செம குத்தாட்டம் ஆடியிருக்கிறார்.
தமன்னா ஆடிய நடன வீடியோ:
நடிகர் வருண் தேஜா இந்த படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். ‘Kodthe’ என்ற இந்த தெலுங்கு பாடலின் Lyrical வீடியோ தற்போது Youtube-ல் வெளியாகி உள்ளது. இதை ரசிகர்கள் பயங்கர ட்ரெண்டிங் ஆக்கி வருகிறார்கள். மேலும், தமன்னா பல படங்களில் குத்துப்பாடலுக்கு நடனம் ஆடியிருக்கிறார். இருந்தாலும் அதை எல்லாம் மிஞ்சும் அளவிற்கு இந்தப் பாடலில் பயங்கர குத்தாட்டம் ஆட்டம் ஆடியிருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.
சமந்தாவின் குத்தாட்டம்:
அதுமட்டுமில்லாமல் சமீபத்தில் வந்த சமந்தாவின் ‘ஊ சொல்றியா’ நடனத்தை ஓரம் கட்டும் விதமாக இந்த பாடல் வந்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.நடிகை சமந்தா தன்னுடைய திரை வாழ்க்கையில் முதன் முறையாக புஷ்பா படத்தில் தான் ஐட்டம் பாடலுக்கு நடனமாடி இருக்கிறார். மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து இருக்கிறது. இந்த படத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா பகத் பாசில் உட்பட பல நடிகர்கள் நடித்துள்ளார்.
ஓரம் கட்டிய சமந்தா பாடல்:
இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழிகளில் வெளியானது. இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து உள்ளார். இந்த படத்தில் சமந்தா ஆடிய ‘ஊ சொல்றியா’ பாடல் பெரிய அளவில் ஹிட்டானது. மேலும், இந்த பாடலுக்கு எவ்வளவு ஆதரவு கிடைத்ததோ அந்த அளவிற்கு சிலர் சர்ச்சையை கிளப்பி இருந்தார்கள். இப்படி ஒரு நிலையில் சமந்தாவின் பாடலை ஓரம் கட்டும் அளவிற்கு தமன்னாவின் பாடல் வந்து இருக்கிறது.
ரெஜினா குத்தாட்டம்:
அதேபோல் சில தினங்களுக்கு முன் ஆச்சார்யா படத்தில் ரெஜினா ஆடியிருக்கும் நடனம், சமந்தாவின் நடனம் போல் எதிர்ப்பு கிளம்பி இருந்தது. மருமகனை தொடர்ந்து மாமாவா என்று எல்லாம் சோசியல் மீடியாவில் கமெண்ட் போட்டு இருந்தார்கள். இயக்குனர் கொரட்டலா சிவா இயக்கத்தில் சிரஞ்சீவி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஆச்சார்யா’. இப்படி கதாநாயகிகள் எல்லாம் ஐட்டம் பாடலுக்கு குதித்தால் சினிமாவின் நிலை என்ன ஆவது? என்றும், தமன்னாவின் பாடலுக்கு என்ன விதமான சர்ச்சையை கிளப்ப போறார்கள் என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம்.