நாம் திரையில் பார்க்கும் பிரபலங்கள் அனைவரும் Born With Silver Spoon இல்லை. ஒவ்வொருவரும் அந்த இடத்தைப் பிடிக்க பட்ட பாடு அவர்களுக்கு மட்டுமே வெளிச்சம். பல நடிகர்கள் ஒரு வேளை சோற்றுக்கு கூட வழி இல்லாமல் வாழ்ந்து பின்னர் தங்களுக்கான இடத்தை இந்த சினிமாவில் பிடித்தவர்கள். அப்படியாக சினிமாவிற்குள் வருவதற்கு முன்னர் நடிகர் நடிகைகள் என்னென்ன வேலைகள் செய்து தங்களது வாழ்க்கையை கழித்தனர் என்று காண்போம்.
1.தல அஜித்
இவர் சினிமா துறைக்குள் வருவதற்கு முன்னர் மெக்கானிக்காக இருந்தவர் என்று பலர் கூறி வந்தாலும், இவர் உண்மையாக செய்த வேலை ஒரு பெரிய டெக்ஸ்டைல்ஸ் கம்பெனியில் வேலை செய்து வந்தார் என்பது தான் நிதர்சனம்.
2.அஜ்மல் அமீர்
கேரளாவை சேர்ந்த நடிகர் தமிழில் தான் அறிமுகமானார். சினிமாவிற்குள் வருவதற்கு முன்னர் இவர் ஒரு டாக்டராக வேலை செய்து வந்தார். தற்போதும் அந்த பணியை தொடர்ந்து வருகிறார்.
3.அரவிந்த் சாமி
சில காலம் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்த இவர் அவரது சொந்த கம்பெனியில் ட்ரெய்னிங் மற்றும் டெவலப்மெண்ட் வேலையை செய்து வந்தார். இவர் ஒரு பெரிய பிசினஸ் மேன் ஆவார்.
4.மாதவன்
சிறு வயதில் இருந்தே மாடலிங் மற்றும் பர்சனாலிட்டி டெவலப்மெண்ட் வேலையை செய்து வந்தார்.
5.நமீதா
சினிமாவிற்குள் வருவதற்கு முன்னர் ஒரு மாடலாக இருந்த இவர் பள்ளி குழந்தைகளுக்கு நீச்சல் கற்றுக்கொடுக்கும் வேலையை செய்து வந்தார்.
6.நயன்தாரா
லேட் சூப்பர் ஸ்டார் நயன்தாரா சினிமாவிற்க்கு வருவதற்கு முன்னர் ஒரு தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக வேலை செய்து வந்தார்.
7.சமந்தா
நாக் சைதன்யாவின் மனைவியான இவர், மாடலிங் செய்து கொண்டே கல்யாண வீடுகளில் ரிசெப்ஷனில் நிற்கும் பெண்ணாகவும் வேலை செய்து வந்தார்.
8.ரஜினிகாந்த்
இந்தியாவின் சூப்பர் ஸ்டாரான இவர் சினிமாற்குள் வருவதற்கு முன்னர் பேருந்து நடர்த்துனராக இருந்து வந்தார்.
9.சூரியா
சினிமாவிற்குள் வருவதற்கு முன்னர் ஒரு கார்மெண்ட் இண்டஸ்ட்ரியில் வேலை செய்து வந்தார்.
10.டாப்ஸி
இவர் ஆடுகளம் படத்தில் தனுசுடன் நடிக்கும் முன்பு ஒரு சாப்டவேர் ப்ரொபசனாக இருந்து வந்தார்.
11.விஜய் சேதுபதி
சினிமாவிற்குள் வருவதற்கு முன்னர் துபாயில் ஒரு அக்கவுண்டன்டாக வேலை செய்து வந்தார் இந்த மக்கள் செல்வன்.
12.விஷ்ணு விஷால்
இவர் சினிமா துறையில் வருவதற்கு முன்னர் தமிழ்நாடு கிரிக்கெட் அணிக்காக விளையாட பயிற்சி பெற்று வந்தார்.