தமிழ் சினிமாவில் இருந்து காணாமல் போன கதாநாயகிகளின் பட்டியல் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் பல வருடங்களாக ஹீரோயின்களாக சில பேர் ஜொலித்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், ஒரு சில படங்களில் மட்டும் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமாகி பல நடிகர்கள் காணாமல் போயிருக்கிறார்கள். அந்த நடிகைகளின் பட்டியல் தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

ஜெயசீல் கோஸ்:

இவர் தமிழில் பிரபுதேவாவின் நடிப்பில் வெளியாகி இருந்த பெண்ணின் மனதை தொட்டு என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி இருந்தார். இந்த முதல் படத்திலேயே இவர் தமிழ் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துவிட்டார். பின் இவர் சாமுராய் என்ற படத்திலும் நடித்தார். அதற்குப் பின் இவர் தமிழில் வேறு எந்த படங்களில் நடிக்கவில்லை. குறிப்பாக இவர் இந்தி, ஒரியா, பெங்காலி என்று வட மொழி படங்களில் நடித்தார். அதுமட்டுமில்லாமல் இவர் டிவி வர்த்தக விளம்பரங்களிலும் நடித்து இருக்கிறார். பின் இவர் தபேலா கலைஞர் பிக்க்ரம் கோஸ் என்பரை திருமமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றன.

Advertisement

இதையும் பாருங்க : 65 கிராமை வைத்து இந்த தொழிலை துவங்கினேன், கொரோனா காலத்தில் கூட ஊழியர்களின் சம்பளத்தை குறைக்கவில்லை – நெட்டிசன்களை கவர்ந்த லலிதா கிரண்.

மானு:

இவர் நடிகை மட்டுமில்லாமல் நடனக் கலைஞரும் ஆவார். இவர் சரணின் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியாகி இருந்த காதல் மன்னன் படத்தில் நடித்திருந்தார். இந்த முதல் படத்திலேயே இவர் இளைஞர்களின் மனதை கொள்ளை அடித்து விட்டார். இந்த படத்திற்கு பிறகு இவர் தமிழ் சினிமாவில் இருந்து கொஞ்சம் ரெஸ்ட் எடுத்து கொண்டார். பின் 2014ஆம் ஆண்டு ஜெயம் ராஜா இயக்கத்தில் என்ன சத்தம் இந்த நேரம் என்ற படத்தில் நடித்திருந்தார். ஆனால், அந்த படம் பெரிய அளவில் வெளியே பிரபலமாகவில்லை. தற்போது இவர் மீடியாவை விட்டு ஒதுங்கி டான்ஸ் ஸ்கூல் வைத்து நடத்தி வருகிறார்.

Advertisement

அமோகா:

இவர் 2003 ஆம் ஆண்டு வெளிவந்திருந்த மாதவனின் ஜேஜே படத்தில் நடித்து இருந்தார். அந்த நேரத்தில் 90 கிட்ஸ் பசங்க எல்லாருமே இவர் மேல ஒரு கிரஸ் என்று சொல்லலாம். அதற்கு பின் இவர்கள் தமிழ் சினிமாவில் பெரிய ஹிட் கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் இந்தி பக்கம் சென்று விட்டார். பலவருடம் கழித்து இவர் ஜீவாவின் நடிப்பில் வெளிவந்த கச்சேரி ஆரம்பம் படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடி மறைந்துவிட்டார். பின் இவர் டெல்லியை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார்.

Advertisement

ஷஹின் கான்:

இவர் 2002 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளிவந்து இருந்த யூத் படத்தில் நடித்திருந்தார். இதனை அடுத்து இவர் தெலுங்கு, கன்னடம், இந்தி என பல மொழி படங்களில் பட்டையை கிளப்பி இருக்கிறார். ஆனால், இவரால் தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறக்க முடியவில்லை. பின் இவர் மும்பையை சேர்ந்த தக்வீம் ஹாசன் கான் என்பவரை காதலித்து திருமணம் செய்து விட்டார். பிறகு மும்பையிலேயே செட்டில் ஆகிவிட்டார்

ரக்ஷிதா:

2002ஆம் ஆண்டு சிம்பு நடிப்பில் வந்த தம் படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் ரக்ஷிதா. அதன்பின் 2004 ஆம் ஆண்டு விஜய்யின் மதுர படத்தில் நடித்திருந்தார். அதற்கு பின் இவர் எந்த படங்களில் நடிக்கவில்லை. தற்போது இவர் குடும்பம், குழந்தை என்று செட்டில் ஆகிவிட்டார்.

ப்ரியங்கா திரிவேதி:

இவர் ராஜ்ஜியம் என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி இருந்தார். அதனைத் தொடர்ந்து இவர் ராஜா, காதல் சடுகுடு, ஜனனம் போன்ற சில படங்களில் நடித்திருந்தார். மேலும், இவர் தெலுங்கு, கன்னடம் போன்ற பிற மொழி படங்களிலும் நடித்திருக்கிறார். பின் இவர் கன்னட இயக்குனரும், திரைக்கதை எழுத்தாளரும், நடிகருமான உபேந்திரா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றன.

Advertisement