ரஜினி, கமல் பட வில்லன், சினிமாவை விட்டுவிட்டு ஹோட்டல் நடத்திய நிலை – ஆசையை நிறைவேற்றிய ரஜினி.

0
387
Pratheep
- Advertisement -

ரஜினிக்கு நண்பன், கமலுக்கு வில்லனாக திகழ்ந்த பிரதீப் சக்தியின் திரைப்பயணம் முதல் மரணம் வரை குறித்த தகவல் தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் வித்தியாசமான கதைகளை கொடுப்பதில் கைதேர்ந்தவர் மணிரத்தனம். இவருடைய இயக்கத்தில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், வசூலையும் பெற்றிருக்கிறது. அந்த வகையில் மணிரத்னம் இயக்கத்தில் 1987 ஆம் ஆண்டு வெளிவந்த படம் தான் நாயகன்.

-விளம்பரம்-

இந்த படத்தில் கமலஹாசன், சரண்யா, ஜனகராஜ், பிரதீப் சக்தி உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படம் மும்பையில் தாதாவாக விளங்கிய வரதராஜ் முதலியாரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது. இந்த படம் ஆஸ்கர் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டு இருந்தது. அதுமட்டுமில்லாமல் இந்த படம் மூன்று தேசிய விருதையும், பல தனியார் விருதுகளையும் வாங்கி இருந்தது. மேலும், இந்த படத்தில் இன்ஸ்பெக்டராக யாராலும் மறக்கமுடியாத கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் பிரதீப் சக்தி.

- Advertisement -

பிரதீப் சக்தி குறித்த தகவல்:

ஆறு அடி உயரம், மேல் வழுக்கைத் தலையுடன் அவரை பார்ப்பதற்கு வில்லன்களே மிரண்டு விடுவார்கள். அந்த அளவிற்கு அவர்களுடைய அவருடைய தோற்றமும், நடிப்பும் இருந்தது. ரஜினியுடன் இவர் திரைப்படக் கல்லூரியில் படித்தவர். இவர் ரஜினிக்கு நெருக்கமான நண்பர் என்று சொல்லலாம். ரஜினியுடன் சேர்ந்து தான் பிரதீப் சக்தி சினிமாவில் வாய்ப்புத் தேடி வந்தார். 1975 ல் அபூர்வ ராகங்களில் ரஜினி அறிமுகமான பிறகு, 1976 அவள் ஒரு தொடர்கதையில் பிரதீப் சக்தி அறிமுகனார்.

பிரதீப் சக்தி திரைப்பயணம்:

இந்த படத்தை பாலச்சந்தர் எடுத்திருந்தார். அப்போது ராஜலட்சுமி உடன் நெருக்கமாக நடிக்க பிரதீப் சக்தி இடம் சொன்னார்கள். ஆனால், பயங்கர வில்லனாக இருக்கும் பிரதீப் சக்தி ஒரு நடிகையுடன் நெருங்கி பழக கூச்சப்பட்டார் என்று சொன்னால் யாருமே நம்ப முடியாது. அவள்ஒருதொடர்கதை படம் நல்ல வெற்றியைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து இவர் சில படங்களில் நடித்தாலும் நாயகன் படத்தின் மூலம் தான் இவருக்கு சினிமா உலகில் ஒரு அங்கீகாரம் கிடைத்தது.

-விளம்பரம்-

பிரதீப் சக்தியின் தாபா:

அதற்குப் பின்பு இவர் தமிழ், தெலுங்கு என படங்களில் நடித்தார். இருந்தாலும் குடும்பத்திற்காக நிரந்தர வேலையை தேடிக்கொள்ள வேண்டும் என்பதற்காக 1993 ஆம் ஆண்டு அமெரிக்காவுக்கு சென்று விட்டு அங்கேயே செட்டிலாகிவிட்டார். அங்கே நியூயார்க்கில் அருகே பாபா ஹட் என்ற பெயரில் ஒரு தாபாவை தொடங்கி இருந்தார். அதில் முழு கவனத்தை செலுத்தி இருந்தார் பிரதீப் சக்தி. அமெரிக்கா சென்றாலும் பிரதீப் சக்தி நடிப்பில் இருந்து விலகாமல் அவ்வப்போது படங்களில் நடித்து வந்தார். 2015 ஆம் ஆண்டு வரை இவர் சிறு சிறு வேடங்களில் நடித்திருந்தார்.

பிரதீப் சக்தி இறப்பு:

முழுநேர நடிகராக வேண்டும் என்பது தான் இவருடைய வாழ்நாள் கனவு. ஆனால், அவருடைய ஆசை நிறைவேறாமல் போனது, மெரிக்கா வந்த பிறகும் ரஜினியுடனான நட்பை அவர் மறக்கவில்லை. அதேபோல் ரஜினியும். அமெரிக்கா வந்தால் ஒருமுறை தனது தாபாவுக்கு வரவேண்டும் என்று ஆசைப்பட்டுள்ளார். அவர் ஆசைபட்டபடியே ரஜினியும் இவருடைய தாபாவுக்கு சென்று இருந்தார். விரைவில் இந்தியா திரும்புவேன் என்று பிரதீப் சக்தி தன்னுடைய நெருக்கமான நண்பர்களிடம் கூறியிருந்தார். ஆனால், அவருடைய ஆசை நிறைவேறாமலேயே 2016 ஆம் ஆண்டு நவம்பர் 20 ஆம் தேதி தன்னுடைய 61 வயதில் இறந்து விட்டார். அவருடைய உடல் அமெரிக்காவிலேயே அடக்கம் செய்யப்பட்டது.

Advertisement