ரசிகர்களை கவர்ந்த தமிழ் சினிமாவில் குரூப் டான்சர்ஸ் லிஸ்ட் – உங்களின் பேவரைட் யார் ?

0
1014
dancers
- Advertisement -

குரூப் டான்ஸ் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நபர்களின் பட்டியல் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. பொதுவாகவே தமிழ் சினிமா படங்களில் வரும் படங்களில் ஹீரோ, ஹீரோயினி உடன் குரூப் டான்ஸர் நடனமாடுவார்கள். அதில் ஒரு சில நபர்கள் ஹீரோ, ஹீரோயினை விட ரசிகர்கள் மத்தியில் கவர்ந்து இருக்கிறார்கள். அவர்களுடைய பட்டியல் தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

-விளம்பரம்-

செல்லமே:

இயக்குனர் காந்தி கிருஷ்ணா இயக்கத்தில் 2004 ஆம் ஆண்டு வெளிவந்த படம் செல்லமே. இந்த படத்தில் விஷால், ரீமாசென், பரத், பானுப்பிரியா, விவேக் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார். இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்தில் விஷால்- ரீமாசென் இருவரும் சேர்ந்து ஆரிய உதடுகள் உன்னது என்ற பாடலுக்கு நடனமாடுவார்கள். அதில் ரீமாசெண்னுக்கே டப் கொடுக்கிற அளவுக்கு குரூப் டான்ஸ் ஒருவர் எக்ஸ்பிரஷன் கொடுத்து இருப்பார்.

- Advertisement -

இதையும் பாருங்க : எம் ஜி ஆரின் இலங்கை மற்றும் கேரளத்து வீடு – தற்போதும் அப்படியே இருக்கும் விஷயம். என்ன தெரியுமா ?

அழகிய தமிழ் மகன்:

இயக்குனர் பரதன் இயக்கத்தில் 2007ம் ஆண்டு வெளிவந்திருந்த படம் அழகிய தமிழ் மகன். இந்த படத்தில் விஜய், ஸ்ரேயா, நமீதா, சந்தானம் உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசை அமைத்திருந்தார். இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருந்தது. இந்த படத்தில் எல்லா புகழும் ஒருவன் ஒருவனுக்கே பாடலில் விஜய் பக்கத்தில் நபர் ஒருவர் நடனமாடுவார். அவர் விஜய் அளவுக்கு வேகமாகவும், அவருக்கு நிகராக முட்டி ஸ்டெப் எல்லாம் போட்டு பயங்கரமாக நடனமாடி இருப்பார்.

-விளம்பரம்-

ஒரு கல்லூரியின் கதை:

இயக்குனர் நந்தா பெரியசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த படம் ஒரு கல்லூரியின் கதை. இந்த படத்தில் ஆர்யா, சோனியாஅகர்வால், ஜெய்வர்மா, சந்தானம், தலைவாசல் விஜய், நிழல்கள் ரவி உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படத்தில் ஆர்யா- சோனியா அகர்வால் இருவரும் சேர்ந்து காதல் என்பது கடவுள் அல்லவா என்ற பாடலை பாடி இருப்பார்கள். அப்போது சோனியா அகர்வால் அருகில் நின்று நடிகை சாய் மாதவியும் பாடியிருப்பார். சோனியாவை விட சாய் மாதவி எக்ஸ்பிரஷன் பயங்கரமாக இருக்கும்.

துள்ளாத மனமும் துள்ளும்:

இயக்குனர் எழில் இயக்கத்தில் 1999 ஆம் ஆண்டு வெளிவந்திருந்த படம் துள்ளாத மனமும் துள்ளும். இந்த படத்தில் விஜய், சிம்ரன், மணிவண்ணன், தாமு, வையாபுரி உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்து இருந்தது. இந்த படத்தில் மேகமாய் வந்து போகிறேன் என்ற பாடல் வரும். இதில் விஜய் அளவுக்கு ஒருவர் நடனமாடி இருப்பார். சொல்லப்போனால் ஒரு சாயலில் அவர் விஜய் மாதிரி இருப்பார். 90ஸ் கிட்ஸ்சுக்கு இவரை நன்றாகவே தெரியும்.

ஜகமே தந்திரம்:

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் 2021 ஆம் ஆண்டு வெளிவந்த படம் ஜகமே தந்திரம். இந்த படத்தில் தனுஷ், ஐஸ்வர்யா லட்சுமி, கலையரசன் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்திருந்தார். இந்த படத்தில் ரகிட ரகிட பாடல் வரும். இந்த பாடலில் நடித்த நடிகையை விட அவர் பக்கத்தில் நின்று ஆடிய ஹேமா தான் படு ஃபேமஸ். இந்த பாடலுக்கு பிறகு ஹேமாவை வளைத்து வளைத்து பலரும் பேட்டி எடுத்து இருந்தார்கள். அதேபோல் இவர் விஜய் பீஸ்ட் படத்தில் அரபிக்குத்து பாடலுக்கு நடனம் ஆடி இருந்தார்.

Advertisement