காமெடி நடிகர் சார்லியின் உண்மை முகம் ! நிஜ வாழ்க்கையில் இவர் இப்படிப்பட்டவரா ?

0
7152
- Advertisement -

தமிஸ் சினிமாவில் குறிப்பிடத்தக்க காமெடி நடிகர்களில் சார்லியும் ஒருவர். கிட்டத்தட்ட 670 தமிஸ் படங்களில் காமெடியனாக நடித்துள்ளார் இவர்.
தனது ஆரம்ப காலத்தில் பல படங்களில் நடித்திருந்தாலும் 90களில் நடித்த சில படங்களுக்குப் பிறகு ஒரு நல்ல காமெடி நடிகராக கால் பதித்தவர் சார்லி. தற்போது 57 வயதான சார்லி அவரது தந்தையை ரோல் மாடலாக வைத்து வாழ்பவர்.

-விளம்பரம்-

கோவில்பட்டியை சேர்ந்தவரான இவர் அங்கு தான் கோவிபட்டி உயர்நிலைப்பள்ளியில் படித்தார். அங்கு அந்த பள்ளியின் தங்கசாமி ஆசிரியர் என்று சொன்னால் அனைவருக்கும் தெரியும். அவதுடைய மகன் தான் சார்லி.

- Advertisement -

தங்கசாமி ஆசிரியர் கண்டிப்பானவர், நன்றாக படிக்கவில்லை என்றாலும் ஒழுக்கத்தை பள்ளியில் கற்றுக்கொள்ள வேண்டும் எனக் கூறி வளர்த்தவர் தங்கசாமி ஆசிரியர். அவரது மகன் எப்படி ஒழுக்கத்தில் இருந்து தப்புவார்.
எப்படி வாழ்ந்தாலும் அது சரி என தங்களுக்கு பிடித்த வாழ்க்கையில் வாழும் சினிமா துறையில் மிகக் கண்ணியமாக வாழ்ந்தவர் சார்லி. பெரிதாக சம்பளம் இல்லை என்றாலும் கிடைத்த சம்பளத்தை வைத்து பிறருக்கு உதவி வாழ்பவர் சார்லி.

பெரிதும் புத்தகங்கள் படிக்கும் பழக்கம் உள்ள இவர் தனது வீட்டில் பல நூறு புத்தகங்கள் வைத்துள்ளார். உலக இலக்ககியங்கள், உலக சினிமா அனைத்தையும் விரல் நுனியில் தெரிந்து வைத்திருப்பவர் சார்லி.
ஏழ்மையாக இருக்கும் மாணவர்களுக்கு படிப்பிற்காக உதவும் பழக்கம் உடையவர் சார்லி, தனது அப்பாவைப் போலவே ஆசிரியையாக ஆசைப்பட்டவர் தற்போது நடிகராகி விட்டதாகவும், படிக்க சொல்லிக்கொடுத்தால் தான்ஆசிரியர் என்று இல்லை படிக்க உதவினாலும் ஆசிரியர் தான் எனக் கூறி அனைவரையும் ஆச்சரியப்படுத்துவார்.தற்போது குணச்சித்திர நடிகராக வலம் வரும் இந்த புனித உள்ளம், அப்பாவாக நடித்து பல படங்களில் முத்திரை பதித்துள்ளது.

-விளம்பரம்-
Advertisement