தமிழ் கடவுள் முருகன் சீரியலில் நடிக்கும் குழந்தை யார் தெரியுமா – அந்த குழந்தை ஆணா பெண்ணா ?

0
7601

விஜய் டீவியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் ஆன்மீக நாடகம் தமிழ்கடவுள் முருகன். இந்த நாடகத்தின் ப்ரோமொவில் ஒரு குழந்தை வரும் தெரியுமா? அந்த குழந்தை பார்ப்பதற்கு பெண் குழந்தை போல் இருக்கும். ஆனால். அது என்ன குழந்தை தெரியுமா?
Anirudhதிருச்சி ஶ்ரீரங்கத்தை சேர்ந்த சத்யநாராயண மூர்த்தி மற்றும் சாரதா தம்பதியினரின் இரண்டாவது குழந்தை தான் தமிழ்கடவுள் முருகன் நாடகத்தில் நடித்துள்ளது. தற்போது சென்னை மடிப்பக்கத்தில் வசித்துவருகின்றனர் இந்த தம்பதியினர்.

இதையும் படிங்க: வடிவேலு சினிமாவுக்கு வருவதற்கு முன் என்ன வேலை செய்து கொண்டிருந்தார் தெரியுமா !

- Advertisement -

தற்போது 9 வயதான அவர் மடிப்பாக்கத்தில் உள்ள சாய்ராம் வித்யாலயாவில் படித்து வருகிறார்.குழந்தைக்கு ஒரு அக்கா உள்ளார். அவருடைய அக்கா பெயர் கிருத்தி அவரும் அதே பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
 Anirudhஅழகான அந்த குழந்தை பெண் குழந்தையாக தான் இருக்க வேண்டும் என பலர் கூறி வருகின்றனர். ஆனால், அவர் ஒரு ஆண் குழந்தை அவரது பெயர் அனிருத். சென்னையில் நடந்த ஆடிசனில் கலந்து கொண்டு தேர்வான அனிருத்திற்கு தூய தமிழ் சரியாக உச்சரிக்க முடியாது என அவரது அம்மா சாரதா கூறுகிறார்.

அனிருத்திற்கு பிடித்த விளையாட்டு கிரிக்கெட். அவர் அடிக்கடி மொபைல் போனில் அவரே கிரிக்கெட் பற்றிய செய்திகளை தேடிப் பார்ப்பார் என அவரது அம்மா மகிழ்வுற கூறுகிறார். மேலும், தற்போது இன்னும் நாடகத்தில் அவருடைய காட்சிகள் வரவில்லை.
Anirudhஇன்னும் சில வாரங்களில் அவருடைய நடிப்பு டீவியில் வெளிப்படும் என அதைப் பார்க்க ஆவலாக உள்ளோம் எனக் கூரகிறார் அவரடைய அம்மா சாரதா.

-விளம்பரம்-
Advertisement