ஆஸ்கர் விருதில் பரிந்துரைக்கப்பட்ட தமிழ் படங்களின் பட்டியல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சினிமாவை பொறுத்தவரைக்கும் ஆஸ்கர் விருது தான் தங்களுடைய படைப்பிற்கு கிடைத்த அதிகபட்ச அங்கீகாரமாக பார்க்கிறார்கள். உலக சினிமாவே ஆஸ்கர் விருதை தான் கௌரவமாக கருதுகிறது. இந்த ஆஸ்கர் விருது வழங்கப்படும் விழா 1929 ஆம் ஆண்டு முதல் தொடங்கப்பட்டது.

ஆஸ்கர் என்று சொன்னாலே நம் அனைவருக்குமே ஏ ஆர் ரகுமானை தான் நினைவுக்கு வரும். அவர் இரண்டு ஆஸ்கர் விருதுகளை வாங்கி வந்து இந்தியாவிற்கு பெருமை சேர்த்தவர். ஆஸ்கருக்கு முதன் முதலாக தமிழில் அதிகாரப்பூர்வமாக அறிவித்த முதல் திரைப்படம் தெய்வமகன் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் 2025 ஆம் ஆண்டிற்கான ஆஸ்கர் விருதுகளுக்கான பட்டியலை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.
ஆஸ்கர் விருது:
மேலும், முதல் கட்டமாக மொத்தம் 29 படங்கள் தேர்வாகியுள்ளது. அதில், ஒரு திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கு இந்தியா சார்பில் அனுப்பப்படுகிறது. அது அமீர்கான் தயாரிப்பில் கிரண் ராவ் இயக்கிய 'லாபதா லேடிஸ்’ படம் (Laapataa Ladies) தேர்வாகி இருக்கிறது. இந்தியாவில் இருந்து மொத்தம் 29 படங்கள் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. இதில் 11 இந்தி படங்கள், 5 மலையாள படங்கள், 3 தெலுங்கு மற்றும் மராத்திய படங்கள், ஒரே ஒரு ஒரியா படம், ஆறு தமிழ் படங்கள் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது.

தமிழ் படங்கள் பட்டியல்:
அந்த வகையில் தமிழ் சினிமாவில் இருந்து மகாராஜா, கொட்டுக்காளி, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், தங்கலான், வாழை, ஜமா ஆகிய ஆறு படங்கள் ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட லிஸ்டில் தேர்வாகி இருக்கிறது. இதில் எந்த படம் ஆஸ்கர் விருதை வெல்ல போகிறது என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம்.

தங்கலான் படம்:
நடிகர் விக்ரம் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த படம் தங்கலான். கேஜிஎஃப்பில் இருந்த பூர்வகுடி தமிழர்களின் வரலாற்றை பேசும் வகையில் இந்த படம் உருவாகி இருக்கிறது. இந்தப் படத்தில் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, ஹரி, பிரிட்டிஷ் நடிகர் டேனியல் கால்டகிரோன் என பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படம் மிக பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.

மகாராஜா படம்:
விஜய் சேதுபதி நடிப்பில் சமீபத்தில் வெளியாகி இருந்த படம் ‘மகாராஜா’. இந்த படத்தை இயக்குனர் நித்திலன் சாமிநாதன் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் மம்தா மோகன்தாஸ், சிங்கம் புலி, அனுராக் காஷ்யப், அபிராமி உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.

வாழை படம்:
இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில், முழுக்க முழுக்க குழந்தைகளை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட படம் தான் ‘வாழை’. இந்த படத்தில் கலையரசன், நிகிலா விமல், பிரியங்கா நாயர் கலையரசன் என பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். தனது வாழ்க்கையில் நடந்த துயரச் சம்பவத்துடன் சேர்த்து மிகப் பெரிய அரசியலையும் பேசியிருக்கும் மாரி செல்வராஜின் ‘வாழை’ படம் மிக பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.






