-விளம்பரம்-
Home பொழுதுபோக்கு சமீபத்திய

‘குகேஷ் தெலுங்கு பையன்’ என்று கொண்டாடும் ஆந்திர முதல்வர், பொங்கி எழும் தமிழ் மக்கள்

0
191

கடந்த சில நாட்களாகவே உலக செஸ் சாம்பியன் குகேஷ் குறித்த செய்தி தான் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. சமீபத்தில் சிங்கப்பூரில் நடந்த உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த குகேஷ் மற்றும் நடப்புச் சாம்பியன் டிங் லிரென் இடையே கடுமையான போட்டி நிலவி இருந்தது. 13-வது சுற்று வரை இருவரும் சம புள்ளிகளில் இருந்ததால் இந்த போட்டி டிராவில் முடியும் என அனைவரும் எதிர்பார்த்தார்கள்.

-விளம்பரம்-

ஆனால், கடந்த டிசம்பர் 12ஆம் தேதி நடந்த 14வது சுற்றில் அற்புதமாக விளையாடி இந்தியாவைச் சேர்ந்த குகேஷ் 58 வது மூவில் நடப்பு சாம்பியன் டிங் லிரெனை வீழ்த்தி, 18 வயதில் உலக செஸ் சாம்பியன்ஷிப் வென்ற வீரர் என்கிற சாதனையைப் படைத்தார். இவரின் சாதனையைப் பாராட்டி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் வாழ்த்து தெரிவித்திருந்தார். அதில், ‘ உங்கள் சாதனை இந்தியாவின் செஸ் பாரம்பரியத்தைத் தொடர்வதோடு, சென்னை உலக செஸ் தலைநகராக அதன் இடத்தை மீண்டும் உறுதிப்படுத்த உதவியுள்ளது’.

தமிழக முதல்வர் வாழ்த்து:

-விளம்பரம்-

மேலும், ‘உங்களை நினைத்து தமிழகம் பெருமை கொள்கிறது’ என்று பதிவிட்டு இருந்தார். தமிழக முதல்வர் பதிவிட்ட அடுத்த இரண்டாவது நிமிடத்தில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குகேஷ் அவர்களுக்கு போட்டி போடும் வகையில் வாழ்த்து தெரிவித்திருந்தார். அதில், ‘ நமது சொந்த தெலுங்கு பையன் குகேஷுக்கு வாழ்த்துக்கள். 18 வயதில் உலகின் செஸ் சாம்பியனாக சிங்கப்பூரில் வரலாற்றை மாற்றி எழுதியுள்ளார்.’

ஆந்திர முதல்வர் வாழ்த்து:

குகேஷ், உங்களின் அசாத்திய சாதனையை ஒட்டுமொத்த தேசமும் கொண்டாடுகிறது. வரும் சதாப்தங்களில் நீங்கள் இன்னும் பல வெற்றிகளையும் பாராட்டுகளையும் அடைய வாழ்த்துகிறேன்’ என்று பதிவிட்டு இருந்தார். இப்படி இரண்டு மாநில முதல்வர்களின் பதிவுகளை பார்த்து இணையவாசிகள் குகேஷ் யார், அவரது மொழி, தமிழா அல்லது தெலுங்கா என்று இணையத்தில் கருத்துக்களை பரிமாறிக் போர் நடத்தி வருகிறார்கள். இதைத் தொடர்ந்து, இணையவாசி ஒருவர், ‘ இந்தக் கேள்வியைக் கூட கேட்கும் உங்கள் துணிச்சலை பாராட்ட வேண்டும்‌.

-விளம்பரம்-

இணையவாசிகள் கருத்து:

குகேஷுக்காக தமிழக அரசு என்ன செய்தது என்பதற்கு இது தான் உதாரணம் என்று, தமிழக அரசு குகேஷுக்கு ரூபாய் 75 லட்சம் நிதி உதவி அளித்த சான்றுகளைப் பதிவிட்டுள்ளார். மேலும் மற்றொருவர், ‘ செஸ் கிராண்ட் மாஸ்டர் குகேஷ் தமிழகத்தால் ஆதரிக்கப்பட்டவர். ஒரு திறமையை வளர்க்க தமிழர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை இப்போது தெலுங்கு மாநிலங்கள் கற்றுக்கொள்ள வேண்டும்’ என்று பதிவிட்டுள்ளார். இப்படி குகேஷை வைத்து ஒரு பக்கம் சண்டை வலுவடைய, மற்றொரு பக்கம் பலர் அவர் இந்தியர் என்றும் பதவிகளை வெளியிட்டு வருகின்றனர்.

யார் இந்த குகேஷ்:

இவை ஒரு பக்கம் இருக்க, குகேஷின் உண்மையான பெயர் குகேஷ் தொம்மராஜு. இவர் தெலுங்கு பாரம்பரியத்தை சேர்ந்தவர் என்றாலும் பிறந்து வளர்ந்தது எல்லாம் சென்னையில் தான். இவரின் பெற்றோர்கள் சென்னையில் தான் மருத்துவத்துறையில் பணியாற்றி வருகிறார்கள். குகேஷின் செஸ் ஆசைக்கு விதை போட்டதும் தமிழகம் தான். அதற்கு உரம் போட்டதும் தமிழகம் தான். அதனை நேற்றைய வெற்றி உரையிலும் தமிழில் குறிப்பிட்டார் குகேஷ். உலக செஸ் சாம்பியன்ஷிப் வென்ற குகேஷுக்கு தமிழக அரசு ரூபாய் 5 கோடி பரிசு அறிவித்திருப்பது அதற்கு ஒரு சான்றாகும்.

-விளம்பரம்-

Follow Us at Google News : அனைத்து சினிமா செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் என்பதை கிளிக் செய்யவும்.

Google news