நாடக கலைஞர், பியூன் வேலை இப்போ வீட்டு வசதி வாரிய தலைவர் – யார் இந்த பூச்சி முருகன் ?

0
3474
- Advertisement -

பொதுவாகவே சினிமா உலகில் இருக்கும் பல நடிகர்கள் வாரிசு நடிகர்களாக இருப்பது பலருக்கும் தெரிந்த ஒன்று. நடிகர்கள் தங்களுடைய பிள்ளைகளை சினிமாவில் வாரிசு நடிகர்களாக அறிமுகப்படுத்துவார்கள். இதுதான் தொன்றுதொட்டு காலமாக சினிமா உருவாகிய காலத்தில் இருந்து தற்போது வரை நடந்து வருகிறது. அந்த வகையில் சினிமாவில் மிகப் பிரபலமான நகைச்சுவை நடிகராக திகழ்ந்த சிவசூரியன் தன்னுடைய மகனை சினிமாவில் வேண்டாம் என்று அரசியலில் ஈடுபடுத்தி இருக்கிறார். அவர் வேற யாரும் இல்லைங்க நம்ம தமிழகத்தின் வீட்டு வசதி வாரியம் துறை தலைவர் பூச்சி முருகன். இவரைப் பற்றி பலரும் தெரிந்திராத பல விஷயங்களை தான் இங்கு பார்க்க போகிறோம்.

-விளம்பரம்-

பழம்பெரும் மூத்த நடிகர் சிவசூரியன். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சிவராம மங்களம் என்ற சிற்றூரில் 1927-ல் பிறந்தவர் சிவசூரியன். தாயார் வடிவு, தந்தை சிதம்பரத்தேவர். இவருக்கு சிவசுப்பு என்ற தம்பியும் சிவசூரிய வடிவு என்ற சகோதரியும் உண்டு. 7-ம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர். அத்துடன் படிப்பை நிறுத்தி விட்டு நடிப்பில் நாட்டம் காட்டினார். இவர் இளவயதிலேயே நாடகங்களில் சிறு வேடங்களில் நடித்தார். பின் சினிமாவில் நுழைந்தார். மேலும், மந்திரிகுமாரி தொடங்கி பல முன்னணி நடிகர்களின் பல படங்களில் நகைச்சுவை நடிகராக சிவசூரியன் நடித்து இருக்கிறார்.

- Advertisement -

சிவசூரியன் திரை பயணம்:

இவருடைய தமிழ் பேச்சு கலைஞருக்கும், எம்ஜிஆருக்கும் மிகவும் பிடிக்கும். அதனாலேயே இவர்கள் இருவருக்கும் நெருக்கமானவராக சிவசூரியன் ஆனார். இதனால் இவருக்கு நிறைய படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. அது மட்டுமில்லாமல் எந்த கதாபாத்திரம் ஆனாலும் அந்த பாத்திரமாகவே மாறி நடிக்கும் திறமை கொண்டவர் சிவசூரியன். இவருடைய மகன் தான் பூச்சி முருகன். இவருக்கு பூச்சி எப்படி வந்ததென்றால், தன் தந்தையைப் போலவே முருகனும் ஆரம்ப காலத்தில் நாடகத்தில் நடித்து வந்தார். நாடகங்களில் பூச்சி என்ற கதாபாத்திரத்தில் நடித்த காரணமாக இவருக்கு பூச்சி என்ற அடைமொழி வந்தது. பின் இவர் பூச்சி முருகன் என்று வைத்துக்கொண்டார்.

பூச்சி முருகனுக்கு கிடைத்த வேலை:

ஆரம்பத்தில் இவருக்கு நிரந்தர வருமானம் இல்லை என்பதால் தன் மகனைப் பற்றி கவலைப்பட்டு சிவசூரியன் எம்ஜிஆரை சந்தித்து ஏதாவது ஒரு அரசு வேலை வாங்கிக் கொடுங்கள் என்று வேண்டுகோள் விடுத்தார். நட்பு பழக்கத்தின் காரணமாக எம்ஜிஆரும் வேலைக்கு ஏற்பாடு செய்ய முயற்சித்தார். அப்போது பூச்சி முருகன் பத்தாம் வகுப்பு கூட தேர்ச்சி பெறவில்லை என்பது தெரிந்தது. பின் எம்ஜிஆர் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய துறையில் கடை நிலை தொழிலான பியூன் வேலையை பூச்சி முருகனுக்கு கொடுத்தார். அண்ணா சாலையில் உள்ள நந்தனத்தில் தன்னுடைய வேலையை தொடங்கினார் பூச்சி முருகன்.

-விளம்பரம்-

பூச்சி முருகன் திமுக கட்சியில் இணைந்தது:

அதற்குப் பிறகு தன்னுடைய நேர்மையான நடவடிக்கையாலும், சுறுசுறுப்பான குணத்தாலும் தபால் கிளார்க்காக பதவி உயர்ந்தார். எல்லோரிடமும் அன்பாகவும், நட்பாகவும் பழக்கக்கூடிய குணம் உடையவர். பின் என்ஜினியர் எக்ஸிகியூட்டிவ் அருணாச்சலம் மகளை காதலித்து திருமணம் செய்துகொண்டார். பின் எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு பூச்சி முருகன் திமுக கட்சியில் இணைந்தார். திமுக கட்சியில் தீவிரத் தொண்டராகவும், கலைஞன் குடும்பத்திற்கு நெருங்கிய நண்பராகவும் ஆனார். கலைஞர் வீட்டுக்குள் யாருடைய அனுமதியும் இல்லாமல் நேரடியாக போகக் கூடிய அளவிற்கு கலைஞருக்கும் இவருக்கும் இடையில் பந்தம் இருந்தது.

பூச்சி முருகன் குணம்:

அதுமட்டும் இல்லாமல் கலைஞருடைய வீட்டில் உள்ள அனைவருக்குமே அன்புடன் பணிவிடைகள் செய்தார். ஒரு நம்பிக்கையுள்ள மனிதனாக கலைஞரிடம் வேலை செய்து வந்தார். கலைஞரின் மகன் தற்போது முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் மேயராக இருந்த போதும், துணை முதல்வராக இருந்த போதும் மெய்க்காப்பாளராக ஸ்டாலினுக்கு இருந்தவர் பூச்சி முருகன். அந்த அளவிற்கு தன்னுடைய பணியை சரியாக செய்தார். அதுமட்டுமில்லாமல் இவ்வளவு வசதிகள் வாய்ப்புகள் தந்தாலும் தனக்கு இது வேண்டும் அது வேண்டும் என்று எந்த ஒரு பதவியையும், பொருளையும் கேட்காத குணமுடையவர் பூச்சி முருகன்.

பூச்சி முருகனுக்கு மு க ஸ்டாலின் கொடுத்த பரிசு:

இந்த குணத்திற்காக தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் பூச்சி முருகனுக்கு தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய துறையில் தலைவராக பதவி கொடுத்தார். அதுவும் பூச்சி முருகனின் மகளின் திருமணத்திற்கு முன்தினம் இந்த பதவியைக் கொடுத்தார். இது ஸ்டாலின் கொடுக்கும் திருமண பரிசு என்று கூட சொல்லலாம். அதுமட்டுமில்லாமல் பூச்சி முருகன் மகளின் திருமண விழாவில் மு க ஸ்டாலின் அவர்கள், எல்லோரும் அவரை பூச்சி முருகன் என்று கூறுவார்கள். ஆனால், நான் மட்டும் தான் முருகன் என்று கூறுவேன். பூச்சி என்பது விஷக் கிருமிகளை அழிக்கக்கூடிய பூச்சி என்று சிறப்பான விளக்கத்தை அவருடைய பெயருக்கு ஸ்டாலின் கொடுத்திருந்தார்.

பூச்சி முருகன் வகிக்கும் பதிவி:

அந்த அளவிற்கு ஸ்டாலினுக்கும் பூச்சி முருகனுக்கும் இடையே ஒரு நல்ல உறவு. அதுமட்டுமில்லாமல் எந்த அலுவலகத்தில் கடைநிலை தொழிலாளியாக இருந்தாரோ பூச்சி முருகன் அதே கட்டிடத்தில் அதே அலுவலகத்தில் தலைவராக தற்போது இருக்கிறார். அதோடு இவர் தமிழ்நாடு நடிகர் சங்க அறக்கட்டளை உறுப்பினர். அதுமட்டுமில்லாமல் நடிகர் சங்க தேர்தலின் போது விஷாலுக்கு ஆதரவாக நின்றவர். நடிகர் சங்கத்துக்கு அரசியலுக்கும் ஒரு பாலமாக இருந்தவர் என்று கூட சொல்லலாம்.இவருடைய கடும் உழைப்புக்கும் முயற்சிக்கும் நேர்மைக்கும் அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. தற்போது இவரை பற்றிய வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement