மோடியின் புகைப்படத்தை morph செய்து முகநூலில் பதிவிட்ட தமிழர் கைது.! யார் தெரியுமா ?

0
684
Modi
- Advertisement -

மதுரை மாவட்டம் தோப்பூரில் அமையவிருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டுவதற்காக மோடி கடந்த ஞாயிற்று கிழமை (ஜனவரி 27) தமிழகம் வந்திருந்தார். அதனை முன்னிட்டு தமிழகத்தில் பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர்.

-விளம்பரம்-

குறிப்பாக திமுக, காங்கிரஸ், மதிமுக போன்ற பல்வேறு கழகம் மற்றும் பல கட்சிகள் சேர்ந்து ட்விட்டரில் மோடிக்கு எதிராக #Gobackmodi என்று ட்ரெண்ட் செய்வதனர். இந்நிலையில்
முகநூலில் பிரதமர் மோடியை அவதூறாக சித்தரித்ததாக மதிமுக பிரமுகர் சத்தியராஜ் என்பவர் கைது செய்யப்ட்டுள்ளார்.

- Advertisement -

சீர்காழியை சேர்ந்த இவர், மோடியின் தமிழக வருகையை முன்னிட்டு தனது முகநூல் பக்கத்தில் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். அத்தோடு முடியின் உருவ புகைப்படத்தை Morph செய்திருந்தார். இதையடுத்து இவர் மீது சீர்காழி பாஜக நகரத் தலைவர் சுவாமிநாதன், சீர்காழி காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

சுவாமிநாதன் அளித்த புகாரின் பெயரில் பிரதமை மோசமாக உருவகப்படுத்தியதற்காக சத்தியராஜ் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்துள்ளது சீர்காழி காவல் துறையினர். இந்த சம்பவத்தால் மதிமுக கட்சியினர் பெரும் கொந்தளிப்பில் இருந்து வருகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement