அதுக்குள்ளவா..? சிம்பு-வெங்கட் பிரபு பட போஸ்டரை கிண்டல் செய்த தமிழ் படம்.! புகைப்படம் உள்ளே

0
1058
Tamil-padam

இயக்குனர் சி எஸ் அமுதன் இயக்கத்தில் 2010 ஆண்டு வெளியான ‘தமிழ் படம் ‘ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாவது பாகம் வெளியாக உள்ளது. இந்நிலையில் தற்போது இந்த படத்தின் மற்றுமொரு போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

சமீப காலமாக வந்த இந்த படத்தின் ட்ரைலர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்டுமல்லாமல் சில நாட்களாக தொடர்ந்து வெளியாகி வரும் இந்த படத்தின் போஸ்டர்கள் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. இதனால் இந்த படத்திற்காக ரசிகர்கள் ஆவலுடன் வெய்ட்டிங்.

- Advertisement -

இந்நிலையில் வெங்கட் பிரபு மற்றும் சிம்பு இணைத்து உருவாகும் படத்தின் பெயர் இன்று வெளியானது.வெளியான சிறிது நேரத்தில் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.இப்படி முன்னணி நடிகர்களின் படங்களின் போஸ்டர் மற்றும் படத்தின் காட்சிகளை கிண்டல் செய்யும் வகையில் தமிழ்ப்படம் குழு அவ்வப்போது போஸ்டர் வெளியிட்டனர்.சிம்பு மட்டும் என்ன விதிவிலக்கா..? அவரையும் விட்டுவைக்காத இவர்கள் இன்று வெளியான சிம்பு படத்தின் போஸ்டரை கிண்டல் செய்யும் வகையில் அவர்களது பாணியில் போஸ்டர் வெளியிட்டனர்.

Advertisement