தமிழ் சினிமாவிற்கு பெரிய தலைவலியாக இருப்பது திருட்டு விசிடி. இப்போது அதை விட பெரும் தலைவலியாக இருப்பது தமிழ்கன், தமிழ்ராக்கர்ஸ் போன்ற இணையதளங்கள்.புதுப்படம் வெளியாகும் அன்றோ அல்லது அதற்கு முன்போ படத்தை திருட்டுத்தனமாக இணையதளங்களில் வெளியிட்டு விடுகின்றனர்
இந்நிலையில் விஜய்--அட்லி கூட்டணியில் உருவாகியுள்ள மெர்சல் படம் தீபாவளிக்கு வெளியாக இருக்கின்றது.
சுமார் 130கோடியில் தயாரிக்கப்பட்டுள்ளது.சமீபத்தில் வெளியிடப்பட்ட பாடல்களும், டீசரும் ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றிருப்பதுடன், மெர்சல் டீசர் உலக சாதனையும் படைத்தது.
இதையும் படிங்க: வரலாறு படைத்த மெர்சல் டீசர் ! Top 5 சாதனைகள் !
இதனால் மெர்சல் படத்தை ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்நிலையில், "மெர்சல் படத்தை இணையதளத்தில் ஹெச்டி தரத்துடன் வெளியிடுவோம், ஆதரவு தாருங்கள்" என்று தமிழ் ராக்கர்ஸ் டுவிட்டரில் பதிவிட்டுள்ளனர்.
இது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.




