தனியார் பேருந்து விபத்து..!தமிழ் சீரியல் நடிகர் பரிதாப பலி..!

0
484

கடந்த சில காலமாகவே நடிகர்களின் மரணம் தொடர்கதையாகி வருகிறது. அதிலும் பிரபலங்கள் சிலர் விபத்துகளில் சிக்கி உயிரழக்கும் சம்பவம் அடிக்கடி வந்த வண்ணம் இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் சீரியல் நடிகர் ஒருவர் விபத்தில் சிக்கி உயிரிந்துள்ளார்.

madanraj

மதுரை மாவட்டம் மேலூர் அருகே தனியார் சொகுசு பேருந்து ஒன்று நேற்று இரவு சென்னையில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி சென்றுள்ளது. மேலூர் அடுத்த வஞ்சிநகரம் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் சென்றுக் கொண்டிருந்தது. அப்போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்த்தை நேரில் பார்த்த சிலர் போலீசாருக்கும் , ஆம்புலன்சுக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். இந்த விபத்தில் 15 மேற்பட்டோர் படு காயம் அடைந்த நிலையில் இந்த பேருந்தில் பயணம் செய்த மதன்ராஜ் என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிந்துள்ளார்.

அவர் யார் என்னவென்று விசாரித்த போது தான் அவர் பல்வேறு தமிழ் சீரியல்களில் துணை நடிகராக நடித்தவர் என்று தெரிய வந்தது. பின்னர் அவரது உறவினருக்கு தகவல் அனுப்பட்டுள்ளது. துணை நடிகர் விபத்தில் இறந்துள்ள சம்பவம் சின்னத்திரை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.