ரெஸ்டாரன்ட், ஜுவல்லரி ஷாப், பியூட்டி பார்லர் – சைட் பிஸ்னஸ்ஸில் அசத்தும் சீரியல் நடிகைகள்.

0
1792
- Advertisement -

சின்னத்திரை சீரியல் நடிகைகளாக மட்டும் இல்லாமல் தொழிலதிபர்களாக திகழும் பிரபலங்கள் குறித்த பட்டியல் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. பொதுவாகவே, மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் ஒன்று சின்னத்திரை சீரியல்கள். சமீப காலமாகவே ஒவ்வொரு சேனலும் வித்தியாசமான கதைகளுடன் தொடர்களை ஒளிபரப்பி வருகிறார்கள். அந்த தொடர்கள் மட்டும் இல்லாமல் தொடர்களில் இருக்கும் பிரபலங்களும் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து வருகிறார்கள். தற்போது சின்னத்திரை நடிகைகள் சீரியல்களில் நடிப்பது மட்டுமில்லாமல் பிற தொழில்களிலும் கவனம் செலுத்தி தொழிலதிபர்களாக திகழ்கிறார்கள். தற்போது சின்னத்திரை நடிகைகள் நடத்தி வரும் தொழில்கள் குறித்த பட்டியல் தான் இணையத்தில் வைரலாகி ஆகிறது.

-விளம்பரம்-

வனிதா விஜயகுமார்:

- Advertisement -

சோசியல் மீடியாவில் சர்ச்சை நாயகியாக இருப்பவர் வனிதா விஜயகுமார். இவர் விஜய் நடிப்பில் வெளிவந்த சந்திரலேகா படத்தின் மூலம் தான் சினிமா உலகில் அறிமுகமாகி இருந்தார். அதன் பின் இவர் சில படங்களில் நடித்து சினிமாவிலிருந்து பிரேக் எடுத்துக் கொண்டார். பின் நீண்ட இடைவெளிக்கு பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் வனிதா மக்கள் மத்தியில் பிரபலமானார். அதற்குப் பிறகு இவர் சீரியல், சினிமா, தொழில்கள் என கொடிகட்டி பறந்து வருகிறார். தற்போது இவர் பல தொழில்களை சொந்தமாக செய்து கொண்டு வருகிறார்.

மகேஸ்வரி:

விஜேவாக மக்கள் மத்தியில் பிரபலமானவர் மகேஸ்வரி. அதன் பின் இவர் சின்னத்திரை சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார். இருந்தாலும், இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தான் மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் இவர் நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது இவர் சீரியல்,சினிமா என்று மட்டும் இல்லாமல் தொழில் அதிபராகவும் இருக்கிறார். இவர் சொந்தமாக உணவகம், பொட்டிக் போன்ற தொழில்களை செய்து கொண்டு வருகிறார்.

-விளம்பரம்-

ஸ்ரீதேவி அசோக்:

சின்னத்திரை சீரியலின் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் ஸ்ரீதேவி அசோக். இவர் சன் டிவி, விஜய் டிவி என பிற மொழி சேனல்களின் ஒளிபரப்பாகும் தொடர்களில் நடித்து வருகிறார். தற்போது இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் காற்றுக்கென்ன வேலி, பொன்னி ஆகிய தொடரில் பிசியாக நடித்து வருகிறார். தற்போது இவர் சொந்தமாக சிறிய பேன்சி ஜுவல்லரி ஷாப் ஒன்றை வைத்து இருக்கிறார்.

சைத்ரா ரெட்டி:

சின்னத்திரை சீரியலின் மூலம் இளசுகளின் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் சைத்ரா ரெட்டி. இவர் யாரடி நீ மோகினி சீரியல் மூலம் தான் எல்லோருக்கும் பிடித்த வில்லியாக மக்கள் மத்தியில் பிரபலமானார். தற்போது இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகும் கயல் சீரியலில் ஹீரோயினியாக நடித்து வருகிறார். இது தவிர இவர் படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். கடந்த ஆண்டு அஜித் நடிப்பில் வெளியாகியிருந்த வலிமை படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் சைத்ரா நடித்திருந்தார். இப்படி இவர் பிஸியாக நடித்துக் கொண்டிருந்தாலும் பியூட்டி பார்லர் ஒன்றை நடித்து வருகிறார். தற்போது சென்னையில் இவருடைய பியூட்டி பார்லரின் பல கிளைகள் இருக்கிறது.

ஸ்ருதிஹா:

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருந்தவர் ஸ்ருதிஹா. இவர் சில படங்களில் நடித்திருந்தார். திருமணத்திற்கு பிறகு இவர் சினிமாவில் நடிப்பதை நிறுத்திக் கொண்டார். விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் தான் மக்கள் மத்தியில் புகழ்பெற்றார். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு இவர் சோசியல் மீடியா, நிகழ்ச்சி என்று பிஸியாகவே இருந்து கொண்டிருக்கிறார். இவர் அழகு சாதனத் துறையில் அதிக ஆர்வம் கொண்டவர். இதனால் இவர் இரண்டு காஸ்மெட்டிக்ஸ் பிராண்டுகளை வைத்திருக்கிறார்.

Advertisement