அவார்டு கொடுக்கறதா கூப்பிட்டு அசிங்கப்படுத்தி அனுப்பிடுவாங்க – பல ஹீரோயின்களின் குரலாய் ஒலிக்கும் டப்பிங் ஆர்ட்டிஸ்ட் ஐஸ்வர்யா.

0
1020
Aishwarya
- Advertisement -

பொதுவாகவே வெள்ளித்திரை, சின்னத்திரை இரண்டிலுமே பல நடிகைகள் கோலோச்சி நடித்திருந்தாலும் பெரும்பாலான நடிகைகள் பக்கத்து மாநிலத்தை சேர்ந்தவர்களே. அவர்களுக்கு சரியாக தமிழ் வராததாலும், நல்ல குரல் வளம் இல்லை என்பாதாலும் டப்பிங் ஆர்ட்டிஸ்ட் குரலை தான் பயன்படுகின்றனர். இதனால் பின்னணி குரல் கொடுப்பவர்கள் இருக்கிறார்கள். அந்த வகையில் சின்னத்திரையில் நமக்கு பிடித்த பல நடிகைகளுக்கு பின்னணி குரல் கொடுத்து மக்கள் மத்தியில் பிரபலமான டப்பிங் ஆர்டிஸ்ட் ஐஸ்வர்யா. இவர் பாண்டியன் ஸ்டோர்ஸ்- மீனா, செம்பருத்தி- பார்வதி, தமிழும் சரஸ்வதியும்- வசுந்தரா, அன்பே வா-பூமிகா என சின்ன திரையில் பல நாயகிகளுக்கு குரல் கொடுத்து வருகிறார்.

-விளம்பரம்-

அதுமட்டுமில்லாமல் விஜய் தேவர்கொண்டா நடிப்பில் வெளிவந்த கீதாகோவிந்தம் படத்தின் தமிழ் வெர்சனில் நடிகை ராஸ்மிகாவுக்கு இவர் தான் குரல் கொடுத்திருந்தார். இப்படி இவர் சின்னத்திரை, வெள்ளித்திரை என இரண்டிலுமே டப்பிங் ஆர்டிஸ்டாக வலம் வந்திருக்கிறார். இந்நிலையில் இவர் சமீபத்தில் பேட்டி ஒன்று அளித்திருந்தார். அதில் அவர் கூறியிருந்தது, சின்ன வயதிலிருந்தே டப்பிங் பேச ஆரம்பித்து விட்டேன். அம்மா மூலமாகத் தான் எனக்கு இந்த துறை அறிமுகமானது. அவர்கள் சொல்லிக் கொடுத்து தான் இப்ப இந்த துறையில் நிற்கிறேன். என் அம்மா ஶ்ரீமதி.

- Advertisement -

டப்பிங் ஆர்டிஸ்ட் ஐஸ்வர்யா அளித்த பேட்டி:

நடிகையாக அவங்களை பலருக்கும் தெரிந்திருக்கும். காதலர் தினம் படத்தில் அவங்களை பார்த்து நாங்கள் சின்ன வயதில் கிண்டல் எல்லாம் பண்ணி இருக்கிறோம். பின் மடிப்பாக்கம் மாதவன், லொள்ளு சபா போன்ற பல காமெடி தொடர்களிலும் அவர் நடித்து இருக்கிறார். அவர்களுடைய கேரியரும் ரொம்பவே போராட்டமாக தான் இருந்தது. இப்ப பல மீம்ஸ்களில் அம்மா போட்டோ வரும். அதை பார்த்து பலரும் அடையாளம் கண்டு பிடித்து நலம் விசாரிக்கிறார்கள். அப்போ, அவர்களுக்கு எந்த அங்கீகாரமும் கிடைக்கவில்லை. இப்போ, சோசியல் மீடியா மூலம் அவர்களுக்கு அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. இதனால் என் அம்மாவும் ரொம்ப சந்தோஷமாக இருக்கிறார்கள்.

சின்னத்திரை அனுபவம்:

அம்மாவுக்கு இதயத்தில் பிரச்சனை இருப்பதால் இப்ப எந்த வேலையும் பண்ணுவதில்லை. மேலும், டப்பிங் எனக்கு பிடித்த துறையாக மாறிவிட்டது. எத்தனை சீரியல்களுக்கு டப்பிங் போயிருந்தாலும் செம்பருத்தி தொடர் மூலமாக தான் பயங்கர ரீச் கிடைத்தது. அந்த தொடரில் மாமான்னு கூப்பிட்ட டயலாக் செம வைரலானது. அதிலிருந்து பல தொடர்களில் மாமான்னு கூப்பிட ஆரம்பித்தேன். அதோடு ஆர்டிஸ்ட் எனக்கான கிரெடிட் தவறாமல் கொடுத்திருக்கிறார்கள். அந்தவகையில் செம்பருத்தி தொடர் உடைய 500 வது எபிசோட் போது சபானா என்னுடைய டப்பிங் ஆர்டிஸ்ட் என்று சொல்லி எனக்கு கிப்ட் கொடுத்திருந்தார். பாண்டியன் ஸ்டார்ஸ் ஹேமா அவர்களுடைய யூடியூபில் என் பெயரை சொல்லி எனக்காக கிரெடிட் கொடுத்தார்கள்.

-விளம்பரம்-

வெள்ளித்திரை அனுபவம்:

ஆரம்பத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனாவிற்கு பேச கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. ஏன்னா, ஹேமா ரொம்ப கடகடவென சீக்கிரமாக பேசுவார். அவர்களுக்கு ஈடுகொடுத்து பேசணும். ஆரம்பத்தில் அது கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. பிறகு போகப்போக செட் ஆகி விட்டது. அதே மாதிரி திருமணம் தொடரில் ஷ்ரேயாவிற்கு பேசினேன். அந்த சீரியலில் நிறைய லவ் சீன்ஸ் வரும். அந்த தொடரும் பயங்கர ஹிட் கொடுத்தது. வெள்ளித்திரை, சின்னத்திரை இரண்டிலும் கவனம் செலுத்தி கொண்டிருக்கிறேன். கீதா கோவிந்தம் படத்திற்காக ராஸ்மிகாவிற்கு டப்பிங் பேசினேன். அதே மாதிரி எம்ஜிஆர் மகன் படத்திற்காக மிருணாளினிக்கு பேசியிருந்தேன். சில படங்களில் பாதி படத்திற்கு டப்பிங் பேசி இருப்பேன். அடுத்து கூப்பிடவே மாட்டார்கள்.

டப்பிங் துறையில் சந்தித்த அவமானங்கள்:

பார்த்த படம் ரிலீஸ் ஆகியிருக்கும். என்ன காரணம் என்று சொல்லாமல் நம்மளை தூக்கி இருப்பார்கள்? அப்படியும் என்னுடைய கேரியரில் நடந்திருக்கிறது. எதுவுமே சொல்லாமல் தூக்குவது ரொம்ப கஷ்டமாக இருக்கும். சீரியலிலும் இந்த மாதிரி பல விஷயங்கள் நடந்து இருக்கிறது. இன்னும் சொல்லனும் என்றால், அவார்டு கொடுப்பதாக சொல்லி பங்ஷனுக்கு கூப்பிட்டு அவார்டு கொடுக்காமல் அவமானப்படுத்தி எல்லாம் அனுப்பி வைத்தார்கள். இந்த மாதிரி அவமானங்கள், புறக்கணிப்புகள் எல்லாத்தையும் சந்திக்கிறேன். அதே போல் எனக்கும், அர்ஜுன் என்பவருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்து இருக்கிறது. இது பக்கா லவ் மேரேஜ். இரண்டு வருடம் நாங்கள் எங்கள் காதலில் உறுதியாக போராடி சம்மதம் வாங்கினோம். ஆகஸ்ட் 31-ம் தேதி எங்களுக்கு திருமணம் உறுதியாகி இருக்கிறது என்று கூறியிருந்தார்.

Advertisement