கொரோனா பிரச்சனை காரணமாக சினிமா மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகள் எல்லாம் ரத்தாகி இருந்தது. இருப்பினும் இடையில் சினிமாவின் போஸ்ட ப்ரொடக்சன் பணிகள் மட்டும் அனுமதிப்பட்டிருந்த நிலையில் சின்னத்திரை தொடர்களை பல கட்டுப்பாடுகளுடன் 60 பேர் மட்டும் நடத்திக்கொள்ளலாம் என்று அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. இதனால் சின்னத்திரை ஷூட்டிங் அனைத்தும் துவங்கப்பட்டது.சினிமா ஷூட்டிங் இல்லாததால் தற்போது ரிலீஸ் ஆக இருந்த படங்கள் அனைத்தும் OTTயில் வருகிறது.
பின்னர் படப்பிடிப்புகளுக்கு கொஞ்சம் தளர்வுகள் கொடுக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது மீண்டும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருவதால் பல்வேறு படப்பிடிப்புகள் முடங்கி இருக்கிறது. அதே போல ஒரு சில படப்பிடிப்புகளை சென்னையிலேயே நடந்த திட்டமிட்டு வருகின்றனர். அதே போல கடந்த மே 10 ஆம் தேதி முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் சீரியல் படபிடிப்புகள் மட்டும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதையும் பாருங்க : டிடியோட மாமா,அட அதாங்க பிரியதர்ஷினியோட கணவரை பார்த்துள்ளீர்களா ?
சமீபத்தில் கூட விஐய் டிவியில் ஒளிபரப்பான ஜோடி நிகழ்ச்சியில் கேப்ரில்லாவிற்கு கொரோனா ஏற்பட்டது. அவரை தொடர்ந்து ஆஜீத், சென்ராயன் போன்றவர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இப்படி கொரோனா இரண்டாம் அலைக்கு இடையில் படப்பிடிப்புகள் நடைபெறுவதால் சீரியல் நடிகர்கள் படப்பிடிப்பில் கலந்துகொள்ள அஞ்சுகின்றனர். ஆனால், சேனல் தரப்போ ஏதாவது எதிர்த்து பேசினால் எங்களை நீக்கிவிடுவார்கள் என்ற பயத்தில் தான் ஷூட்டிங் செல்கிறோம் என்கிறார் அந்த பிரபல சீரியல் நடிகர் ஒருவர்.
கடந்த ஆண்டே கொரோனா அச்சத்திற்கு நடுவே சீரியலில் நடிக்க முடியாது என்று சொன்ன 20க்கும் மேற்பட்டோரை சீரியல் குழு நீக்கியுள்ளதாம். இப்படி ஒரு நிலையில் பிரபலமான சீரியலில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் ‘பூ’ பெயர் கொண்ட சீரியலின் ஹீரோக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. ஆனாலும், அவரை ஷூட்டிங்கில் தொடர்ந்து கலந்து கொள்ளச்சொல்லி வற்புறுத்தியிருக்கிறார்கள்.இதனால் அந்த சீரியலில் பணிபுரிந்த 30 பேருக்கு கொரோனா அறிகுறிகள் ஏற்பட்டிருக்கிறது.
இதேபோல் பிரபல பார்ட் -2 சீரியலின் ஷூட்டிங்கும் தொடர்ந்து நடந்திருக்கிறது. இதில் உதவி இயக்குநர்கள் சிலருக்கு லேசான அறிகுறிகள் தெரியவந்த பிறகே ஷூட்டிங்கை நிறுத்தியிருக்கிறார்கள். இப்படி தான் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஷூடிங்கில் கலந்துகொண்ட நடிகைகைக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அவர் மூலமாக அவரது அம்மாவிற்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
இப்படி ஒரு நிலையில் அவரது அம்மா கடந்த சில நாட்களுக்கு முன்னர் காலமாகி இருக்கிறார். இதுகுறித்து அவரிடம் கேட்கப்பட்டுள்ள போது , ’நான் பேசற மனநிலையில் இப்ப இல்லீங்க. முதல்ல எனக்கு கொரோனா பாசிட்டிவ். என் மூலமா அம்மாவுக்கு வந்தது. ரெண்டு நாள் முன்னாடி அம்மா இறந்துட்டாங்க. எல்லாம் கொஞ்சம் சரியானதும் நான் பேசறேன்’ என்று கூறியுள்ளார். ஊரடங்கால் சினிமா ஷூட்டிங் தடை செய்யப்பட்டுள்ளது. சீரியல் ஷூட்டிங்கிற்கு மட்டும் அனுமதி கோரப்பட்டது. ஆனால் அரசுத் தரப்பிலிருந்து, தெளிவான உத்தரவோ, அனுமதியோ இன்னும் தரப்படவில்லை. அப்படி இருந்தும் சீரியல் ஷூட்டிங்கள் தொடர்ந்து நடைபெற்று கொண்டு தான் வருகிறது.