டிஆர்பி ரேட்டிங்கில் டாப் 5ல் இருக்கும் சீரியல்கள், சன் டிவியை பின்னுக்கு தள்ளிய விஜய் டிவி- எந்த சீரியல் no.1 தெரியுமா?

0
428
- Advertisement -

டிஆர்பி ரேட்டிங்கில் டாப் 5 இடத்தை பெற்றிருக்கும் சீரியல்கள் பட்டியல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சமீப காலமாக சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் சின்னத்திரை பக்கம் வந்து விட்டார்கள். அதிலும் தமிழ் டிவி சேனல்கள் அனைத்திலும் எண்ணற்ற பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது. குறிப்பாக, சீரியல்கள் கிராம மக்களை மட்டும் இல்லாமல் நகர்புற மக்களையும் அதிகமாகவே கவர்ந்திருக்கிறது.

-விளம்பரம்-

கிட்டத்தட்ட 21 வருடங்களுக்கும் மேலாக சீரியல்கள் எல்லாம் மக்களை கவர்ந்து வைத்துள்ளது. வாரத்தின் முதல் நாள் திங்கள் முதல் சனிக்கிழமை வரை நாள்தோறும் காலையில் தொடங்கி இரவு வரை சீரியல்கள் வரிசைகட்டி டிவியில் டெலிகாஸ்ட் செய்யப்பட்டு வருகிறது. மேலும், சீரியல்கள் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான முன்னணி சேனல்களாக சன் டிவி மற்றும் விஜய் டிவி திகழ்கிறது. எப்போதும் இந்த இரு சேனல்களுக்கு இடையே தான் கடும் போட்டி நிலவி வருகிறது.

- Advertisement -

சீரியல் டிஆர்பி:

அதோடு டிஆர்பி ரேட்டிங்கில் கூட இந்த சேனல்களின் சீரியல்கள் தான் மாற்றி மாற்றி இடம் பிடிக்கிறது. அந்த வகையில் இந்த 2024 ஆம் ஆண்டின் 28 வாரத்தில் முதல் ஐந்து இடத்தை பிடித்திருக்கும் சீரியல்கள் பட்டியல் தான் தற்போது வெளியாகியிருக்கிறது. எப்போதுமே டிஆர்பி ரேட்டிங்கில் டாப்பில் சன் டிவி சீரியல் தான் முதல் இடத்தை பிடித்து விடுகிறது. எப்பவாவது தான் விஜய் டிவி வரும். இந்த வாரம் டிஆர்பி ரேட்டிங்கில் சன் டிவியை முந்திக்கொண்டு விஜய் டிவி சீரியல் முதலிடத்தை பிடித்திருக்கிறது.

சிறகடிக்க ஆசை:

இந்த சீரியல் தான் டிஆர்பியில் நம்பர் 1 இடத்தை பிடித்திருக்கிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியலில் ‘சிறகடிக்க ஆசை’ ஒன்று. இந்த சீரியல் ஒளிபரப்பான நாளில் இருந்து தற்போது வரை விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் டிஆர்பியில் டாப்பில் இருக்கிறது. இந்த சீரியல் கதாநாயகன் முத்து, கதாநாயகி மீனா ஆகிய இருவரின் வாழ்க்கையில் நடக்கும் எதார்த்த குடும்ப கதை. தற்போது இந்த சீரியல் முதல் இடத்தை பிடித்து இருப்பதற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

-விளம்பரம்-

சிங்கப்பெண்ணே சீரியல்:

அதேபோல் எப்போதுமே டிஆர்பியில் முன்னிலையில் இருந்த சன் டிவியின் ‘சிங்கப் பெண்ணே’ சீரியல் தற்போது இரண்டாவது இடத்திற்கு வந்திருக்கிறது. குடும்ப சூழ்நிலைக்காக கிராமத்திலிருந்து சென்னைக்கு வந்து கார்மெண்ட்ஸ்சில் வேலைக்கு சென்று கொண்டு இருக்கிறார் ஆனந்தி. இவருடன் சில பேர் வேலை செய்கிறார்கள். அங்கு அவர்கள் தைரியமாக எதிர்கொள்ளும் பிரச்சனைகளை மையமாக வைத்து தான் சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.

கயல்:

எதிர்பார்க்காத வகையில் சில வாரங்களாகவே முதல் இடத்தில் இருந்த ‘கயல்’ சீரியல் மூன்றாம் இடத்தை பிடித்து இருக்கிறது. இந்த சீரியல் 2021 ஆம் ஆண்டு முதல் சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் சைத்ரா ரெட்டி கதாநாயகியாகவும், கதாநாயகனாக சஞ்சீவ் நடித்து வருகிறார்கள். தன் குடும்பத்திற்காக எல்லா சந்தோசத்தையும் இழந்து போராடும் ஒரு பெண்ணின் கதை தான் கயல் சீரியல்.

மருமகள் சீரியல்:

இந்த சீரியல் சமீபத்தில் தான் சன் டிவியில் ஒளிபரப்பட்டது. இந்த சீரியல் நான்காம் இடத்தை பிடித்து இருக்கிறது. இந்த சீரியலில் கேபி கதாநாயகியாகவும், ‘கண்ணான கண்ணே’ சீரியல் நடிகர் ராகுல் ரவி ஹீரோவாகவும் நடிக்கிறார்கள். இந்த சீரியல் ஒளிபரப்பான நாளில் இருந்து நன்றாக சென்று கொண்டு இருக்கிறது.

பாக்கியலட்சுமி :

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘பாக்கியலட்சுமி’ ஐந்தாம் இடத்தை பிடித்திருக்கிறது. தற்போது சீரியலில் ராதிகா சொன்ன பொய்யால் ஈஸ்வரி ஜெயிலில் இருந்தார். பின் மயூ சொன்ன சாட்சியால் ஈஸ்வரி வெளியே வந்து விட்டார். இனி அடுத்து என்ன நடக்கும் என்ற விறுவிறுப்பில் சீரியல் சென்று கொண்டு இருக்கிறது.

Advertisement