டிஆர்பி ரேட்டிங்கில் இந்த ஆண்டின் 34 வது வாரத்தில் டாப் 5 இடத்தை பெற்று இருக்கும் சீரியல்கள் பட்டியல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் டிவி சேனல்கள் அனைத்திலும் எண்ணற்ற பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது. குறிப்பாக, ஒவ்வொரு சேனலும் புதுப்புது சீரியல்களை வித்தியாசமான கதைக்களத்துடன் ஒளிபரப்பி வருகிறார்கள். இதனால் கடந்த சில ஆண்டுகளாக சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சின்னத்திரை பக்கம் வந்து விட்டார்கள்.

கிட்டத்தட்ட 21 ஆண்டுகளுக்கு மேலாக சீரியல்கள் மக்களை கவர்ந்து வைத்துள்ளது. வாரத்தின் முதல் நாள் திங்கள் முதல் சனிக்கிழமை வரை நாள் தோறும் காலையில் தொடங்கி இரவு வரை சீரியல்கள் வரிசை கட்டி டிவியில் டெலிகாஸ்ட் செய்யப்பட்டு வருகிறது. மேலும், சீரியல்கள் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான முன்னணி சேனல்களாக சன் டிவி மற்றும் விஜய் டிவி திகழ்கிறது. எப்போதும் இந்த இரு சேனலுக்கு இடையே தான் கடும் போட்டு நிலவி வருகிறது.
சீரியல் டிஆர்பி:
அதோட டிஆர்பி ரேட்டிங்கில் கூட இந்த சேனல்களின் சீரியல்கள் தான் மாற்றி மாற்றி முதலிடம் பிடிக்கிறது. அந்த வகையில் இந்த 2024 ஆம் ஆண்டின் 34 வது வாரத்தில் முதல் ஐந்து இடத்தை பிடித்திருக்கும் சீரியல்கள் பட்டியில்தான் தற்போது வெளியாகியிருக்கிறது. இந்த வாரம், சன் டிவி, விஜய் டிவி சீரியல்களை பின்னுக்கு தள்ளி இருக்கிறது.

கயல்:
கடந்த வாரம் மூன்றாம் இடத்தைப் பிடித்த 'கயல்' சீரியல் இந்த வாரம் 8.91 புள்ளிகளுடன் முதல் இடத்தை பிடித்துள்ளது. தனது குடும்பத்திற்காக எல்லா சந்தோஷத்தையும் இழந்து போராடும் ஒரு பெண்ணின் கதை தான் கயல் சீரியல். அடுத்தடுத்து கயலுக்கு பல தொந்தரவுகள் வந்த நிலையில், தற்போது நிலைமை மாறி பாசிட்டிவான கண்ணோட்டத்தில் இந்த தொடரை ஒளிபரப்பி வருகிறார்கள்.
சிங்கப் பெண்ணே:
கடந்த சில வாரங்களாக டிஆர்பி ரேட்டிங்கில் முதல் இடத்தை பிடித்த 'சிங்க பெண்ணே' சீரியல் இந்த வாரம் 8.77 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. குடும்ப சூழ்நிலைக்காக கிராமத்தில் இருந்து சென்னைக்கு வந்து கார்மெண்ட்ஸ்சில் வேலைக்குச் சென்று கொண்டிருக்கிறார் ஆனந்தி. இவருடன் சில பேர் வேலை செய்கிறார்கள். அங்கு அவர்கள் தைரியமாக எதிர்கொள்ளும் பிரச்சனைகளை மையமாக வைத்து தான் சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.

மூன்று முடிச்சு:
கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் துவங்கப்பட்ட 'மூன்று முடிச்சு' சீரியல் 8.16 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தை பிடித்திருக்கிறது. இந்த சீரியலில் நடிகை சுவாதி கொண்டே கதாநாயகியாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக நடிகர் நியாஸ் நடித்துள்ளார். சமீபத்தில் பிரபல 'வானத்தைப்போல' சீரியல் முடிவடைந்த நிலையில், அதே நேரத்தில் இந்த தொடரை ஒளிபரப்பி வருகிறார்கள்.
மருமகள்:
இந்த சீரியல் சில மாதங்களுக்கு முன் தான் சன் டிவியில் ஒளிபரப்ப தொடங்கினார்கள். ஒளிபரப்பான நாளில் இருந்து தற்போது வரை இந்த சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது 'மருமகள்' 8.02 புள்ளிகளுடன் டிஆர்பி யில் நான்காம் இடத்தை பிடித்துள்ளது. தற்போது சீரியலில் பிரபு- ஆதிரை திருமணம் ட்ராக் தான் போய்க் கொண்டிருக்கிறது.

சிறகடிக்க ஆசை:
கடந்த சில வாரங்களாகவே டிஆர்பி யில் நம்பர் ஒன் இடத்தை பிடித்திருந்த விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'சிறகடிக்க ஆசை', இந்த வாரம் 7.95 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இந்த சீரியல் ஒளிபரப்பான நாளில் இருந்து தற்போது வரை விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது. இந்த சீரியல் கதாநாயகன் முத்து, கதாநாயகி மீனா ஆகிய இருவரின் வாழ்க்கையில் நடக்கும் எதார்த்த குடும்பக் கதை.






