தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சிப் பாடல் வெளியாகி இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் என்றென்றும் தளபதியாக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய். பல போராட்டங்களுக்குப் பிறகுதான் இவர் இந்த இடத்திற்கு வந்து இருக்கிறார். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்திருக்கிறது. இது ஒரு பக்கம் இருக்க, விஜய் எப்போது அரசியலுக்கு வருவார் என்று சில ஆண்டுகளாகவே கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

அந்த வகையில் கடந்த பிப்ரவரி மாதம் தான் தமிழக வெற்றிக் கழகம் என்று விஜய், தன் கட்சியின் பெயரை அறிவித்திருந்தார். இதனால் நிர்வாகிகள் மட்டும் இல்லாமல் ரசிகர்களும் உற்சாகமடைந்து விட்டார்கள். அது மட்டும் இல்லாமல் கட்சியில் உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்று புதிய செயலியையும் உருவாக்கி உறுப்பினர் சேர்க்கும் பணியில் நிர்வாகிகள் மும்மரமாக ஈடுபட்டு வருகிறார்கள். மேலும், வருகின்ற 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் நேரடியாக களத்தில் இறங்கி போட்டியிட இருப்பதாக விஜய் அறிவித்திருந்தார்.
விஜய் அரசியல்:
அதற்கான வேலைகளிலும் கட்சி நிர்வாகிகள் செயல்பட்டு இருந்தார்கள். இப்படி இருக்கும் நிலையில் விஜய் அவர்கள் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை ஆகஸ்ட் 22 ஆம் தேதி அறிமுகப்படுத்துவதாக கூறி இருந்தார். தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலுமே கொடி ஏற்றும் விழா நடைபெறும் என்று கூறப்பட்டது. அதோடு சில தினங்களுக்கு முன் பனையூரில் உள்ள தன்னுடைய கட்சி அலுவலகத்தில் விஜய் கட்சி கொடியை பறக்கவிட்டு ஒத்திகை பார்த்திருந்தார். இதனால் சோசியல் மீடியா முழுவதும் விஜயின் கட்சி கொடி குறித்த செய்திகள் தான் அதிகமாக பகிரப்பட்டு இருந்தது.
https://www.youtube.com/live/HTOyKbPn4Bw
விஜய் கட்சியின் கொடி ஏற்றும் விழா:
மேலும், பனையூரில் கட்சி அலுவலகத்தில் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சுமார் 5,000 பேரை வைத்து கட்சி கொடியை ஏற்ற பிரம்மாண்டமாக நடத்த போலீசாருக்கு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால், போலீஸ் அனுமதி தர மறுத்து இருந்தது. இதனால் விஜய், தன் கட்சி அலுவலகத்தில் 250-300 பேரை மட்டும் வைத்து கட்சி கொடியை ஏற்ற முடிவு செய்ததாக கூறப்பட்டது. மேலும், தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அவர்கள் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில், என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களே, சரித்திரத்தின் புதிய இசையாகவும், புதிய விசையாகவும் ஒவ்வொரு நாளும் அமைந்தால் அது பெரும் வரம்.
https://www.youtube.com/watch?v=as86Klk5qUE
விஜய் வெளியிட்ட அறிக்கை:
அப்படியான வரமாக இறைவனின் இயற்கையும் நமக்கு அமைத்துக் கொடுத்திருக்கும் நாள் தான் ஆகஸ்ட் 22, 2024. நம் தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய அடையாளமான கொடி அறிமுகம் ஆகும் நாள். தமிழ்நாட்டின் நலனுக்காக உழைத்து, நம் மாநிலத்தின் அடையாளமாகவும் மாறப்போகவும் நம் வீர கொடியை, வெற்றிக் கொடியை நாளை நம் தலைமை நிலைய செயலகத்தில் அறிமுகப்படுத்தி, கழகக் கொடி பாடலை வெளியிட்டு, கழகக் கொடியை ஏற்றி வைக்கிறோம் என்பதை பெருமகிழ்வுடன் அறிவிக்கிறேன். நாளை முதல் நாடெங்கும் நமது கட்சிக் கொடி பறக்கும், தமிழ்நாடு இனி சிறக்கும், வெற்றி நிச்சயம் என்று அறிவித்திருந்தார்.
TVK Song#TVKsong #தமிழகவெற்றிக்கழகம் pic.twitter.com/nvCpL6F2YB
— B.A.T.M.A.N 🦇 (@Iam_TheShadows) August 22, 2024
கட்சிக்கொடியோடு வெளியிடப்பட்ட கட்சிப் பாடல்:
இந்நிலையில், இன்று விஜய் அவர்கள் கட்சி அலுவலகத்தில் தமிழக வெற்றி கழகத்தின் கட்சி கொடியை ஏற்றி இருக்கிறார். கட்சிக் கொடியை ஏற்றுவதற்கு முன்பு உறுதிமொழி எடுத்து, கட்சிக்கான பாடலையும் வெளியிட்டு அதை பாடியும் கொடியை ஏற்றி இருக்கிறார். அந்தப் பாடலில், 'தமிழன் கொடி பறக்குது, தலைவன் யுகம் பொறக்குது' என்பது போல் வரிகளை அமைத்திருக்கிறார்கள். அதேபோல், 'அரசை கேள்வி கேட்கும், தளபதியின் காலம் இது' என்பது போன்ற வலிமையான வரிகளை இப்பாடல் கொண்டிருக்கிறது. தற்போது தவெக கட்சியின் பாடல் தான் சோசியல் மீடியாவில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.






