மோடிக்காத்தான் உங்க மூஞ்சிக்காக இல்லை..!கட்சில ஆள் சேக்க பாருங்க..!தமிழிசையை காச்சிய காயத்ரி..!

0
245
gaythri-raguram

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சென்னை எம்.ஆர்.சி.நகரில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டல் ஒன்றில் வீக் எண்ட் பார்ட்டி நிகழ்ச்சியில் காயத்ரி ரகுராம் கலந்து கொண்டு திரும்பிய போது குடி போதையில் இருந்தார் என்று காவல் துறையினர் காயத்ரியை மடக்கி அபராதம் விதித்ததாக செய்திகள் வெளியானது.

காயத்ரி பொய்: தமிழிசை அம்பலம்

காயத்ரி பொய்: தமிழிசை அம்பலம்https://youtu.be/O2QzGVUcQmo#Gayathriraghuram #BJP #DrukenDrive #Tamilisai #tamizhisai #Biggboss

Posted by Dinamalar – World's No 1 Tamil News Website on Tuesday, November 27, 2018

இதற்கு தன்னிலை வீடியோ மூலம் விளக்கமளித்த காயத்ரி ரகுராம், நான் குடித்துவிட்டு கார் ஒட்டவில்லை. நான் பி ஜெ பியில் இருப்பதால் என்மீது காழ்ப்புணர்ச்சி கொண்ட சிலர் என் பெயரை கெடுகின்றனர். கட்சியிலேயே எனக்கு எதிராக சிலர் இருக்கின்றனர் என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் பா ஜ க கட்சியின் முக்கிய தலைவரான தமிழிசை இதுகுறித்து பேசுகையில், காயத்ரி ரகுராம் கட்சியிலேயே இல்லை. அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்றபோதே கட்சியில் இருந்து தன்னை விளக்கும்படி கேட்டுக்கொண்டார் அதனால் அவரை கட்சியில் இருந்து நீக்கப்பட்டார் என்று கூறியுள்ளார்.

தமிழிசையின் இந்த கருத்திற்கு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ள காயத்ரி, . நான் பாஜகவின் உறுப்பினராக சேர்க்கப்பட்டது ஒரு கணினி வாயிலாக. நீங்களாகவே யாரையும் கட்சியில் சேர்க்கவோ விலக்கவோ இயலாது. நான் இங்கிருப்பது நரேந்திர மோடிக்காகவே தவிர உள்ளூர் முகங்களுக்காக அல்ல. உங்கள் கட்சியிலிருந்து உறுப்பினர்களை விரட்டுவதை விட்டுவிட்டு ஆள் சேர்க்கப் பாருங்கள்.