தமிழிசை சௌந்தர்ராஜன் , ஓவர் பிரபல காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தனின் மகள் ஆவார். இவரது கணவரும், மருத்துவருமான சவுந்தரராஜன் ஶ்ரீ ராமசந்திரா மருத்துவ கல்லூரியில் பேராசிரியராக உள்ளார். 3 தசாப்தங்களுக்கு மேலாக தனது பகுதியில் மருத்துவராக மிகவும் பிரபலமாக இருக்கிறார் தமிழிசை. பல முக்கிய தமிழ் நாளிதழ் மற்றும் வார இதழ்களுக்காக, ஏராளமான மருத்துவ மற்றும் அரசியல் கட்டுரைகளை தமிழில் மொழிபெயர்த்துள்ளார். பா.ஜ.க தேசிய தலைவர்களின் தமிழக வருகையின் போது அவர்களது பேச்சுக்களை தமிழில் மொழிபெயர்ப்பவர்களில் முக்கியமானவர். பா.ஜ.க தொண்டர்கள் இவரை பாசத்துடன் “தமிழகத்தின் சுஷ்மா ஜி” என அழக்கின்றனர்.

விமானம் நடுவானில் செல்லும் போது பயணிக்கு உடல்நிலை சரியில்லை :-

தெலுங்கானா மாநில கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் வாரணாசி சென்றிருந்தார். நேற்று இரவு 1.30 மணிக்கு டெல்லியில் இருந்து ஐதராபாத் வழியாக சென்னை புறப்பட்ட விமானத்தில் ஐதராபாத்துக்கு சென்றார். இன்று அதிகாலை 3.30 மணியளவில் அந்த விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது பயணி ஒருவர் உடல் முழுவதும் வியர்த்து கண்கள் சொருகிய நிலையில் மயங்கி கொண்டிருந்ததை விமான பணிப்பெண் கவனித்து உள்ளார். உடனே அவசர அவசரமாக விமானத்தில் டாக்டர் யாராவது இருக்கிறீர்களா. பயணி ஒருவருக்கு அவசர சிகிச்சை தேவைப்படுகிறது என்று அறிவித்த வண்ணம் இருந்துள்ளார்.அதை கேட்டதும் டாக்டர் தமிழிசை முன் பகுதியில் இருந்து எழுந்து பின் பகுதிக்கு சென்றார்.

Advertisement

இதையும் பாருங்க : 50 ஆண்டுகள் சினிமாவே பார்த்திராத தமிழ் தெம்மாங்கு பாட்டியாம்மாவிற்கு தேடி வந்த தேசிய விருது.

​விமானம் தரையிறங்கும் வரை உடன் இருந்த தமிழிசை :-

அங்கு தனியாக அமர்ந்து இருந்த அந்த பயணியை பரிசோதித்து முதல் உதவி சிகிச்சை அளித்து சில மருந்துகளையும் கொடுத்து உள்ளார். சிறிது நேரத்தில் அந்த பயணி கண் விழித்து பரவாயில்லை என்பது போல் லேசாக புன்முறுவல் செய்துள்ளார். அவருக்கு தைரியம் சொன்ன தமிழிசை அவர் அருகிலேயே அமர்ந்து ஐதராபாத் வரை பயணம் செய்துள்ளார். விமானம் தரையிறங்கியதும் விமான நிலைய மருத்துவ குழுவினரிடம் அந்த பயணியை ஒப்படைத்துவிட்டு கவர்னர் மாளிகை புறப்பட்டு சென்றார்.

Advertisement

விமான பணிப்பெண்னை பாரட்டிய தமிழிசை :-

உடல்நிலை பாதித்த அந்த பயணி ஓய்வு பெற்ற உயர் போலீஸ் அதிகாரி என்பது தெரிய வந்தது.
தக்க நேரத்தில் கவனித்து உஷார்படுத்திய விமான பணிப்பெண்ணை டாக்டர் தமிழிசை பாராட்டினார்.
அதே விமானத்தில் பயணித்த ராணுவ அதிகாரி ஒருவர் இதை செல்போனில் படம் பிடித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றி இருக்கிறார். இதுபற்றி டாக்டர் தமிழிசையிடம் கேட்டபோது, “தக்க நேரத்தில் அந்த பணிப்பெண் கவனித்துள்ளார். அவருக்கு ரத்த அழுத்தம் மிகவும் குறைந்து போயிருந்தது. தலையும் குழைந்து விழும் நிலையில் இருந்தார். கவனிக்காமல் இருந்திருந்தால் மயக்க நிலையை அடைந்து இருப்பார் என்றார்.

Advertisement

மருத்துவராக இருந்து அரசியல்வாதியாக மாறிய தமிழிசை சவுந்தரராஜன் :-

சென்னை மெட்ராஸ் மெடிக்கல் காலேஜில் எம்பிபிஎஸ் பட்டம் பெற்றார். டாக்டர். எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைகழகத்தில் டி.ஜி.ஓ படித்த அவர், கனடாவில் சோனாலஜி மற்றும் எப்இடி சிகிச்சைக்கு சிறப்பு பயிற்சி பெற்றுள்ளார். ஶ்ரீ ராமசந்திரா மருத்துவ கல்லூரியில் துணை போராசிரியராக தனது தொழில் வாழ்க்கையை துவங்கியவர், 5 ஆண்டுகளுக்கு பின்னர் பா.ஜ.காவில் இணைந்து முழு நேர அரசியலில் குதித்தார்.

1999ல் தென்சென்னை மாவட்ட மருத்துவ அணி செயலாளராக தனது அரசியல் வாழ்வை துவங்கிய தமிழிசை, 2001ல் மருத்துவ அணி மாநில பொதுச்செயலாளர், 2005ல் தென்மாநில மருத்துவ அணி ஒருங்கிணைப்பாளர், 2007ல் மாநில பொதுச்செயலாளர், 2010ல் மாநில துணைத்தலைவர், 2013ல் பா.ஜ.க தேசிய செயலாளர் என பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். தற்போது பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவராக உள்ளார் தமிழிசை. 2006 &2011 தமிழக சட்டமன்ற தேர்தல் மற்றும் 2009 மக்களவை தேர்தலில் போட்டியிட்ட தமிழசை, மிகக்குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.

Advertisement