படத்தில் ஜிஎஸ்டி மற்றும் டிஜிட்டல் இந்தியா குறித்து வசனங்கள் இருப்பதால் அந்த காட்சிகளுக்கு பாஜகவினர் கடும் கண்டனங்களை தெரிவித்து வந்தனர். இந்நிலையில் அந்த காட்சிகளை நீக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.தொடர் நெருக்கடியால் படத்தில் இருந்து வசனங்களை நீக்க தயாரிப்பாளர்கள் தரப்பு முடிவு செய்துள்ளது. ஆனால் பாஜகவின் இந்த நெருக்கடியை தமிழக அரசியல் தலைவர்கள், திரைத்துறையினர் மட்டுமின்றி தேசிய அளவில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிட்டது.
தற்போது பா.ஜ.க அதிரும் அளவுக்கு மேலும் ஒரு அடியாக #MersalvsModi என்ற ஹேஸ் டேக்கை மாற்றி #TamilnasvsModi என்ற ஹேஸ் டேக்கை ட்ரென்ட் செய்து வருகிறார்கள் தமிழ் இளைஞர்கள்.
பா.ஜ.க கட்சிக்கு விஜய் ரசிகர்களின் அதிரடியாக மட்டுமே இருந்த இந்த பிரச்சனை தற்போது தமிழர்களின் மரணஅடியாக உருவெடுத்துள்ளது.




