பிக் பாஸால் ஏற்பட்ட சர்ச்சை – கமலுக்கு நோட்டிஸ் அனுப்பிய தமிழக மருத்துவத்துறை. என்ன காரணம் தெரியுமா

0
347
kamal
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் என்றென்றும் உலக நாயகனாக கலக்கிக் கொண்டிருப்பவர் கமலஹாசன். இவர் நடிகர் மட்டுமில்லாமல் தயாரிப்பாளர், தொகுப்பாளர் என பன்முகம் கொண்டு இருக்கிறார். மேலும், விஜய் டிவியில் வெற்றிகரமாக நான்கு ஆண்டுகளை கடந்து ஐந்தாவது ஆண்டாக பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இந்த ஐந்து ஆண்டுகளுமே பிக்பாஸ் நிகழ்ச்சியை கமலஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். அதோடு இவரை பார்ப்பதற்கு என்றே பிக்பாஸ் நிகழ்ச்சி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது என்று சொல்லலாம்.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் சில நாட்களுக்கு முன் கமலஹாசன் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. கமலுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. கடந்த வாரம் தான் பூரண குணமடைந்து கமலஹாசன் டிஷ்சார்ஜ் செய்யப்பட்டார். இதனால் கமலஹாசன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் கடந்த வாரம் ரம்யாகிருஷ்ணன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியிருந்தார்.

- Advertisement -

மேலும், கமலஹாசன் 4 ஆம் தேதி பூரண நலம் பெற்று மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு போகாமல் நேராக ஈவிபி அரங்கத்திற்கு சென்றார். பின் பிக்பாஸில் கடந்த வாரம் நிகழ்ச்சிக்கான படப்பிடிப்பில் கலந்து கொண்டார். இதைப் பார்த்து பலரும் கமலஹாசனை பாராட்டியும், நலம் விசாரித்தும் இருந்தார்கள். இந்தநிலையில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அவர்கள் இது குறித்து கருத்து ஒன்று பதிவிட்டிருக்கிறார். அதில் அவர், மருத்துவமனையில் இருந்து கொரோனா விதிமுறைகளை மீறி நேரடியாக படப்பிடிப்புக்கு கமலகாசன் சென்றிருக்கிறார்.

இதுதொடர்பாக தமிழக மருத்துவத்துறை துறைக்கு கமல் விளக்கம் கொடுக்க வேண்டும். அது மட்டுமில்லாமல் தமிழக மருத்துவத்துறை கமலுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும் என்று கூறியிருக்கிறார். தற்போது இந்த தகவல் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதனால் இனிவரும் காலங்களில் பிக் பாஸ் நிகழ்ச்சியை கமல் தொகுத்து வழங்குவாரா? என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம்.

-விளம்பரம்-
Advertisement