வெளிநாட்டை தொடர்ந்து தமிழகத்திலும் பீஸ்ட் படத்திற்கு தடை விதிக்க வேண்டும் – முஸ்லீம் லீக்கின் எதிர்ப்பு

0
409
Beast
- Advertisement -

பீஸ்ட் படத்தை தடை செய்ய சொல்லி வெளிநாட்டை தொடர்ந்து தமிழகத்திலும் எதிர்ப்பு கிளம்பியுள்ள தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது தளபதி விஜய் அவர்கள் நெல்சன் இயக்கத்தில் ‘பீஸ்ட்’ என்ற படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படத்தின் ரிலீசுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்து கொண்டு இருக்கின்றனர். மேலும், இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இந்த படத்தில் செல்வராகவன், பூஜா ஹெக்டே, விடிவி கணேஷ் உட்பட பல நடிகர்கள் நடித்து உள்ளார்கள்.

-விளம்பரம்-
beast

இந்த படத்தில் அனிருத் இசையமைப்பாளராக பணிபுரிந்து இருக்கிறார். சமீபத்தில் தான் இந்த படத்தின் அரபிக்குத்து பாடல், ஜாலியோ ஜிம்கானா பாடல்கள் வெளியானதை தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. அதுமட்டும் இல்லாமல் இந்த பாடலுக்கு ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை என பலரும் நடனமாடி வீடியோக்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டு வருகிறார்கள். தற்போது இந்த படத்தின் இறுதி கட்ட பணிகள் மும்முரமாக நடந்து கொண்டிருக்கின்றது. மேலும், இந்த படத்தில் விஜய் ‘வீர ராகவன்’ என்ற பெயரில் நடித்து இருக்கிறார்.

- Advertisement -

பீஸ்ட் படத்தின் ட்ரைலர்:

அதோடு பீஸ்ட் படம் வருகிற ஏப்ரல் 13 ஆம் தேதி உலகமெங்கும் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் ட்ரைலர் கூட சமீபத்தில் தான் வெளியாகி இருக்கிறது. ட்ரெய்லரில் ஒரு மால்லை பயங்கரமான தீவிரவாதிகள் ஹைஜாக் பண்ணுகிறார்கள். இந்த கடத்தலில் விஜய் எப்படி மக்களைக் காப்பாற்றினார்? என்பது தான் படத்தின் சுவாரஸ்யமே என்று கூறப்படுகிறது. மேலும், இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது. ஆனால், இந்த படத்தில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் மற்றும் வன்முறை சம்பந்தப்பட்ட காட்சிகள் அதிகமாக இருப்பதாக கூறி குவைத் அரசாங்கம் படத்திற்கு தடை விதித்துள்ளது.

முஸ்லிம் லீக் சார்பில் எழுதி உள்ள கடிதம்:

இந்த நிலையில் இப்படத்தை தமிழகத்திலும் தடை செய்ய வேண்டும் என தமிழ்நாடு முஸ்லிம் லீக் சார்பில் அறிக்கை ஒன்று வெளியாகி உள்ளது. தமிழ்நாடு முஸ்லிம் லீக் சார்பில் தமிழக உள்துறை செயலாளர் எஸ் கே பிரபாகரனுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. அதில் அவர்கள் கூறியிருப்பது, தமிழ் திரைப்படங்களில் பெரும்பாலும் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரித்து வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இஸ்லாமியர்கள் என்றால் தீவிரவாதிகள் என்ற தோற்றத்தை திரைத்துறையினர் உருவாக்கி வருகின்றனர். தங்களது ஜாதி அடையாளம் மற்றும் ஜாதி தலைவர்களின் பெயர்கள் கூட கதாபாத்திரங்களில் இடம்பெற்றால் அதற்கு கடும் எதிர்ப்புகளை சமுதாய அமைப்புகள் தெரிவிப்பதை பார்த்து வருகிறோம்.

-விளம்பரம்-

இஸ்லாமிய அமைப்புகள் செய்த உதவிகள்:

ஆனால், இஸ்லாமியர்கள் மட்டும் வெடிகுண்டு, துப்பாக்கி கலாசாரத்தில் ஈடுபட்டு நாட்டின் இறையாண்மைக்கு எதிராக செயல்படுவது போல தொடர்ந்து திரைப்படங்களில் காட்சிகள் இடம்பெறுவது மிகவும் வேதனை அளிக்கக் கூடிய விஷயமாக உள்ளது. 2015ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போது இஸ்லாமிய அமைப்புகள் செய்த பணியை யாரும் மறந்து விட முடியாது. கொரோனா காலத்தில் உயிரிழந்தவர்களை சொந்த பந்தங்கள் கூட உடல்களை அடக்கம் செய்ய தயங்கிய போது இஸ்லாமிய அமைப்புகள் தான் அடக்கம் செய்தார்கள். இப்படி மக்களின் கஷ்ட காலத்தில் தங்கள் உயிரையும் துச்சமென நினைத்து களத்தில் இறங்கி இஸ்லாமியர்கள் நிவாரண பணிகளை செய்து வருவதை யாரும் மறுக்க முடியாது.

பீஸ்ட் படம் வெளியிட தடை விதிக்க காரணம்:

உண்மை நிலை இப்படி இருக்கும் போது இஸ்லாமியர்களை தீவிரவாதியாக சித்தரித்து பீஸ்ட் படத்தின் கதை உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. தற்போது இஸ்லாமியர்கள் புனித ரமலான் மாதத்தில் நோன்பு கடைபிடித்து வருகின்றனர். இந்த சூழலில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரித்து பீஸ்ட் திரைப்படம் வரும் 13ம் தேதி வெளிவந்தால் இஸ்லாமியர்களிடையே ஒரு மனக்கசப்பு சூழல் ஏற்படும். இந்த அசாதாரண சூழலை கருத்தில் கொண்டு பீஸ்ட் திரைப்படம் வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டு இருந்தார்கள். இப்படி முஸ்லிம் சார்பில் வெளிவந்துள்ள கடிதம் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Advertisement