நெருங்கியது டிசம்பர்..!மீண்டும் ஒரு பெரும் மழை..!வானிலை ஆய்வு மையம்..!

0
231
Chennairain

டிசம்பர் மாதம் வந்தாலே அது சென்னைக்கு ஒரு அபாயகரமான மாதமாகவே இருந்து வருகிறது. சுனாமி துவங்கி, கடந்த 2016 ஆம் ஆண்டு சென்னையில் பெய்த கன மழை வரை டிசம்பரில் பல்வேறு இயற்கை சீற்றங்கள் நிகழ்ந்தேறியுள்ளது.

Chennai

அந்த வகையில் இந்த ஆண்டும் டிசம்பரில் கனத்த மழை ஒன்று தாக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சமீபத்தில் வந்த
தகவலின்படி அந்தமான் பகுதியில் ஏற்பட்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி குறைந்து வலுவிழந்ததால் தற்போது அது புயல் சின்னமாக மாறியுள்ளதால், வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர பகுதிகளில் உள்ள கடலோர பகுதிகளில் வரும் 14 ஆம் தேதி கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த வானிலை ஆய்வு மைய அதிகாரி புவியரசன், தென்கிழக்கு வாங்கக்கடல் மற்றும் வடக்கு அந்தமானில் நிலைகொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வரும் 14 ஆம் தேதி இரவு வடக்கு தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா நோக்கி நகர போகிறது என்று தெரிவித்துள்ளார்.

இந்த மாற்றத்தால் சென்னை உட்பட வட தமிழகத்தின் கடலோர பகுதிகளில் அநேக இடங்களில் மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மைய அதிகாரி புவியரசன் தெரிவித்துள்ளார். புயல் எச்சரிக்கையால் கடலோரத்தில் இருக்கும் மக்கள் பீதியடைந்துள்ளனர்.