இவரை கூட விட்டுவைக்கலையா..! இவர் என்ன பாவம் பண்ணார் ..?தமிழ்படம் 2.0 ! புகைப்படம் உள்ளே

0
815
Tamizh-padam-2.0

தமிழில் 2010 ஆம் ஆண்டு முழு நீள காமெடி படமாக வெளிவந்த படம் ” தமிழ் படம் “. புதுமுக இயக்குனர் சி.எஸ். அமுதன் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் மிர்ச்சி சிவா ஹீரோவாக நடித்திருந்தார். லாஜிக் இல்லா காமெடியால் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

tamil padam
தமிழ் படம் பாகம் 1- இல் பல்வேறு தமிழ் சினிமாவில் ஹீரோக்கள் செய்த பல்வேறு மாஸ் சீன்களை செம கலாய் கலாய்த்திருப்பார் நடிகர் சிவா. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாவது பாகத்தை உதயநிதியின் ஒய் நாட் நிறுவனம் தயாரித்து வருகிறது.

சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டீசரில் பல்வேறு முன்னணி ஹீரோக்களின் படங்களை பாரபட்சம் பார்க்காமல் கலாய்த்திருந்தனர். அதில் தமிழ் சினிமாவின் முன்னனி நடிகர்களான விஜய், அஜித் தொடங்கி அரசியல்வாதிகளான பண்ணீர் செல்வம், சி ஆர் சரச்வதி வரை பாரபட்சம் பார்க்காமல் கலாய்த்து இருந்தனர். இந்த படத்தின் சில டெம்ப்லேட்களும் படு ட்ரெண்டாக இருந்து வந்தது.

trumph

தற்போது இந்த படத்தின் மற்றுமொரு புகைப்படமும் வெளியாகியுள்ளது. அதில் அமெரிக்கா அதிபரை டொனால்டு ட்ரம்பை படு பங்கமாக களாய்த்துள்ளனர். தற்போது அந்த புகைப்படம் ட்ரெண்டாக மாற, இதனை பல மீம் கிரேட்டர்களும் இந்த புகைப்படத்தை ஷேர் செய்து கலாய்த்து வருகின்றனர்.

இதில் சிறப்பான விடயம் என்னவெனில் அமெரிக்கா அதிபர் ட்ரம்பும், வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னும் சமீபத்தில் தான் இருநாட்டு பிரச்சனை குறித்து விவாதிக்க ஒரு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சில மணி நேரத்திற்கு முன்னர் தான் வெளியாகியது. ஆனால் அதற்குள்லாகவே அந்த புகைப்படத்தை ‘தமிழ் படம்’ படத்தின் படக்குழு கலாய்த்து ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளது.