தமிழ் படம் 2 இயக்குனரிடம் சூர்யாவின் உயரத்தை கலாய்க்க சொன்ன விஜய் ரசிகர்..!

0
830
Surya

இயக்குனர் சி எஸ் அமுதன் இயக்கித்தல் அகில உலக சூப்பர் ஸ்டார் சிவா நடித்துள்ள “தமிழ் படம் 2” படத்திற்கு தான் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துக்க கொண்டிருக்கின்றனர் என்றும் கூறலாம். அணைத்து முன்னணி ஹீரோக்களையும் கிண்டல் செய்து இவர்கள் வெளியிட்டு வரும் போஸ்டர்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

tamizh padam

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களான ரஜினி கமல் முதல் தொடங்கி வளர்ந்து வரும் நடிகர் சிவகார்த்திகேயன் வரை இவர்கள் கிண்டல் செய்து ஒரு பாடலையும் வெளியிட்டனர்.அது போக சமீபத்தில் சில அரசியல் கட்சி தலைவர்களை கிண்டல் செய்து வெளியான இந்த படத்தின் இரண்டு நிமிட காட்சிகளும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக பேசப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் இந்த படத்தின் இயக்குனர் சி எஸ் அமுதன் ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்கள் கேட்கும் நேரடி கேள்விகளுக்கு பதிலளித்து வந்தார். அப்போது விஜய் ரசிகர் ஒருவர் “நடிகர் சூர்யாவை இந்த படத்தில் கிண்டல் செய்துள்ளேர்களா. அப்படி இல்லை என்றால் அவரது உயரம் குறித்து கிண்டல் செய்யுங்கள்” என்று பதிவிட்டிருந்தார்.

Tp2

இதற்க்கு பதிலளித்த இயக்குனர் சி எஸ் அமுதன் “கண்டிப்பாக அதனை நான் செய்யமாட்டேன்” என்று பதில் பதிவிட்டுள்ளார். அமுதனின் இந்த பதிலை அனைவரும் வரவேற்று வருகின்றனர்” ஒருவரின் படத்தை கிண்டல் செய்யலாம். ஆனால், தனிப்பட்ட முறையில் ஒருவரின் உருவத்தை கிண்டல் செய்யக்கூடாது ‘ என்று பதிவிட்டு வருகின்றனர்.