தமிழ்படம் 2.0 படத்தின் பெயர் அதிரடி மாற்றம்..! புதிய டைட்டில் இதுதான்.! காரணம் என்ன தெரியுமா..?

0
826
Tamizh-pada-2.0

தமிழ் சினிமாவில் முழு நீல காமெடி படங்கள் நல்ல வரவேற்ப்பை பெற்றுவிடுகிறது. அந்த வகையில் 2010 ஆம் ஆண்டு இயக்குனர் சி எஸ் அமுதன் இயக்கித்தில் வெளியான ‘தமிழ் படம்’ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகமும் விரைவில் வெளியாகவுள்ளது

tamizh padam

இந்த படத்தின் முதல் பாகத்தை போலவே இரண்டாம் பாகத்திலும் அணைத்து ஹீரோக்களையும் பயங்கரமாக கலாய்த்துள்ளனர் என்று, சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டீசர் மூலம் தெரிந்தது. மேலும், சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியில் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது.

இந்த படத்தின் தலைப்பிலேயே இவர்கள் ரஜினியின் ‘எந்திரன்’ படத்தை கலாய்ப்பது போன்று ‘தமிழ் படம் 2.O ‘ என்று வைத்திருந்தனர். இதில் 2.O வில் உள்ள ‘O ‘ என்பது ஆங்கில வார்த்தையை குறிப்பிடுவதாக இருப்பதால் அதனை படத்தில் இருந்து நீக்கியுள்னர். இந்த தகவலை இந்த படத்தை தயாரித்துள்ள ‘ஒய் நாட் ஸ்டூடியோ’ ட்விட்டரில் பகிர்ந்துள்ளது.

இந்நிலையில் ஆங்கிலத்தில் பெயர் வைத்தால் வரி விலக்கு அளிக்கப்பட மாட்டாது என்று கருதியே ‘O ‘ என்ற ஆங்கில வார்த்தையை பட குழு நீக்கியுள்ளனர் என்று ஒரு சிலர் கூறிவருகின்றனர். அதனால் இந்த படத்திற்கு ”தமிழ் படம் 2 ” என்று மட்டும் டைட்டில் வைத்துள்ளனர். எப்படியோ இதையும் கிண்டல் செய்து இந்த பட குழுவினர் புகைப்படத்தை வெளியிட்டாலும் ஆச்சர்யம் இல்லை.