அக்ஷரா ஹாசன் அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்டது முன்னாள் காதலரான இந்த நடிகரா ? அதுவும் அவர் இந்த கமல் பட நடிகையின் மகனா ?

0
2192
- Advertisement -

தமிழ் சினிமாவில் இருக்கும் எத்தனையோ உச்ச நட்சத்திரங்களில் வாரிசுகள் நடிகர்களாக அறிமுகமானவர்கள் தான். அந்த வகையில் தமிழ் சினிமாவில் ஆண்டுகளாக உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்ந்து வரும் உலகநாயகனின் கமலின் இரண்டு மகளும் நடிகைகள் தான். அதில். இளைய மகள் ஸ்ருதி ஹாசன், இந்தியில் இவர் நடித்த ‘ஷமிதாப்’ திரைபடம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அதன் பின்னர் தமிழில் அஜித் நடித்த ‘விவேகம்’ படத்தில் நடித்திருந்தார். இவர் இயங்கி வந்த சபாஷ் நாயுடு படமும் பாதியில் கைவிடப்பட்டது.

-விளம்பரம்-
Tanuj Virwani opens up about what happened after ex-girlfriend Akshara  Haasan's private photos were leaked

அதன் பின்னர் கமல் தயாரிப்பில் விக்ரம் நடிப்பில் வெளியான ‘கடாரம் கொண்டான் திரைப்படத்தில் நடித்து இருந்தார் அக்ஷரா ஹாசன். தற்போது அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு படத்தில் நடித்து வருகிறார். கடந்த கடந்த ஆண்டு இவரது அந்தரங்க புகைப்படங்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. ஆனால், அது ஒரு குறும் படத்திற்காக எடுத்த புகைப்படம் என்றும் அதனை வேண்டுமென்றே யாரோ வெளியிட்டுவிட்டனர் என்றும் கூறினார் அக்ஷரா.

- Advertisement -

இதையடுத்து நடிகை அக்ஷரா ஹாசன் காவல் நிலையத்திலும் புகார் அளித்திருந்தார். இந்த விவகாரத்தில் முன்னாள் கதாநாயகி ரதியின் மகனும், நடிகருமான தனுஷ் விர்வானியும், அக்‌ஷரா ஹாசனும் காதலித்ததாகவும் தனுஷ் விர்வானி தான் இந்த புகைப்படங்களை வெளியிட்டு இருக்கலாம் என்றும் தகவல் பரவியது. ஆனால், அந்த புகைப்படங்களை வெளியிடவில்லை என்று தனுஷ் விர்வானி கூறியிருந்தார். இப்படி ஒரு நிலையில் இது குறித்து ஒரு வருடம் கழித்து விளக்கமளித்துள்ளார் தனுஷ் விர்வானி.

இதுகுறித்து தெரிவித்துள்ள அவர், அக்‌ஷராவின் குறிப்பிட்ட அந்த புகைப்படங்கள் வெளியானபோது என்னை அழைத்து 2013-ல் எடுக்கப்பட்ட அந்த புகைப்படங்கள் எப்படி வெளியாகி இருக்கும்? என்று கேட்டார். போனை பழுதுபார்க்க கொடுக்கவில்லை என்றும் கூறினார். அந்த காரியத்தை நான் செய்து இருப்பதாக நினைக்கிறாயா? என்று கேட்டேன். அவர் இல்லை என்றார். அதன்பிறகு என்னை குற்றவாளிபோல் சித்தரித்து தகவல்கள் பரவின. இதனால் நாங்கள் இருவரும் பேசுவதை நிறுத்தி விட்டோம் என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement