தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்றழைக்கப்படும் நடிகை நயன்தாரா, தமிழ் சினிமாவில் மட்டுமல்ல தென்னிந்திய சினிமாவிலும் கொடிகட்டி பறந்து வருகிறார். கதாநாயகிகளை கமிட் செய்ய நினைக்கும் இயக்குனர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் முதல் முன்னுரிமையாக இருப்பது நடிகை நயன்தாராவின் பெயர் தான்.
நயன்தாரா கோடிகளில் சம்பளம் வாங்கி வருகிறார் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒரு விடயம் தான். ஆனால், சமீபத்தில் தனது மார்க்கெட்டை உணர்ந்த நடிகை நயன்தாரா தனது சம்பளத்தை 6 கோடியாக உயர்த்தியுள்ளாராம். இது ஒரு சில நடிகர்கள் வாங்கும் சம்பளத்தை விட மிகவும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நயன்தாரா சம்பளம் குறித்தும், நடிகர்களை விட நடிகைகளுக்கு ஏன் சம்பளம் வழங்குவதில்லை என்று நடிகை டாப்ஸி காட்டமாக பேசியுள்ளார். சமீபத்தில் தனது படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற டாப்ஸியிடம், நிருபர் ஒருவர் கதாநாயகிகளை விட, கதாநாயகர்களுக்கு அதிக சம்பளம் கொடுக்கப்படுவது பற்றி உங்கள் கருத்து? என்று கேள்வி கேட்டிருந்தார். அதற்கு பதிலளித்த டாப்ஸி, கதாநாயகிகளை விட, கதாநாயகர்களுக்கு அதிக சம்பளம் கொடுப்பதில் நியாயம் இருக்கிறது. அவர்களை வைத்துத்தான் வியாபாரம் நடக்கிறது. ஆனால், நடிகர்களுக்கு இணையாக நடிகைகளும் சம்பளம் வாங்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
தற்போது பட உலகின் லேடி சூப்பர் ஸ்டாரா? என கேள்வி கேட்கப்பதற்கு . சீரியசாக பதில் அளித்தார் டாப்சி. அப்படியெல்லாம் மிக கூடுதலான உயரத்துக்கு என்னை கொண்டு சென்று விடாதீர்கள். ஒரு படத்துக்கு நான் மூன்று கோடி ரூபாய்தான் வாங்குகிறேன். என்னை விட இரு மடங்கு அதிகமாக ஆறு கோடி ரூபாய் வாங்கும் நடிகை நயன்தாரா தான் உண்மையிலேயே லேடி சூப்பர் ஸ்டார்.
அவர் அளவுக்கு நான் வர வேண்டும் என்றால், நீண்ட தூரம் பயணிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். டாப்ஸி மற்றும் நயன்தாரா இருவரும் அல்டிமேட் ஸ்டார் நடித்த ‘ஆரம்பம்’ திரைப்படத்தில் நடித்திருந்தனர். அந்த படத்தில் டாப்ஸி ஆர்யாவின் ஜோடியாக நடித்திருந்தார். தற்போது தமிழில் முன்னணி நடிகை இல்லை என்றாலும் டாப்ஸி, இந்தியில் ஒரு முக்கிய நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார்.