தமிழ் சினிமாவில் தனுஷ் நடித்த ஆடுகளம் படம் மூலம் அறிமுகமானவர் நடிகை டாப்சி அறிமுக படத்தில் சிறப்பான வரவேற்பினை பெற்ற இவர், அடுத்து நடித்த படங்கள் வரிசையாக தோல்வி அடைய இவருக்கு தமிழ் சினிமாவில் வாய்ப்பு மங்க தொடங்கியது.
தமிழில் லீட் நாயகியாக வலம் வர முடியவில்லை என்றாலும், இந்தியில் இவர் நடித்த, ’பிங்க்’, ’நாம் ஷபானா’ படங்கள் அவரை கவனிக்க வைத்தன. இதையடுத்து மேலும் பல இந்தி படங்களில் நடித்தார். இப்போது, தட்கா, மிஷன் மங்கள், ஷாந்த் கி ஆங்க் உட்பட சில படங்களில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட டாப்ஸி தென்னிந்திய சினிமா இயக்குனர் ஒருவரை கடுமையாக கலாய்த்துள்ளார் . அதில் சினிமாவில் பெண்களை கவர்ச்சியாக காட்ட பல மோசமான செயல்கள் செய்கிறார்கள். வயிறு மற்றும் வேறு இடங்களில் பழம், பூ என அடித்து திரையில் மிக கவர்ச்சியாக காட்டுவார்கள். அப்படி பட்ட இயக்குனருடன் நான் வேலை செய்துள்ளேன்.
அந்த இயக்குனர் ஸ்ரீதேவி , ஜெய சுதா போன்ற பல கதாநாயகர்களை வைத்து இயக்கியுள்ளார். எனவே, அவருக்கு கதாநாயகியை எப்படி கவர்ச்சியாக காட்ட வேண்டும் என்பது தெரியும். நான் அவரது படத்தில் நடித்த போது முதல் காட்சியே பாடல் தான்.
அந்த பாடலில் என் வயிற்றில் தேங்காய் வைத்து ஷூட் செய்தார்கள் என டாப்ஸி பேசியிருந்தார். எதற்காக அப்படி ஒரு காட்சியை எடுத்தார்கள் என்று எனக்கு புரியவில்லை என்று கூறியுள்ளார். மேலும் , அந்த பாடலையும் மேடையில் ஒளிபரப்பி அனைவரும் சிரித்துள்ளனர். தற்போது அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.