பிக் பாஸ் இது கூட காப்பியா..? சுயமா யோசிக்க மாட்டிங்களா..? கிண்டல் செய்யும் பார்வையாளர்கள்

0
489
Task

விஜய் தொலைகாட்சியில் தற்போது மிகவும் பிரபலமான ஷோ என்றால் அது பிக் பாஸ் தான். இந்தியில் 12 சீச ன்களை கடந்து சென்ற பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்த்துத் தான் கடந்த ஆண்டு தமிழிலும் இந்நிகழ்ச்சியை ஆரம்பித்து விஜய் டிவி. நிகழ்ச்சியை தான் காப்பி அடித்தார்கள் என்றால் இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும் டாஸ்க்கை கூட தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் காப்பி அடித்து வருகின்றனர் என்று சமீபத்தில் தான் தெரியவந்தது.

bgg-boss

- Advertisement -

நேற்றய நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் அனைவருக்கும் டிக்கெட் டு பினாலே டாஸ்க் கொடுக்கப்பட்டது. இதில் போட்டியாளர்கள் அனைவரும் தண்ணீர் நிறைந்த ஒரு கண்ணாடி பௌலில் கையில் ஏந்திக் கொண்டு ஒரு வட்ட மேடையில் நடந்து வர வேண்டும். ஒவ்வொரு முறை பஸ்ஸர் ஒளித்தவுடன் யாரது பௌலில் தண்ணீர் குறைவாக இருக்கிறதோ அவரகள் போட்டியில் இருந்து வெளியேற்ற படுவார் என்பது தான் டாஸ்க்.

இந்த டாஸ்கை கண்டவுடன், இந்த டாஸ்கை எங்கயோ பார்த்திருக்கிறோமே என்ற ஒரு எண்ணம் தோன்றயது. அது வேறு எதிலும் இல்லை இந்தியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 10 ல் தான் இதே போன்ற டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. அதனை அப்படியே காப்பி அடித்து தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இறக்கியுள்ளனர்.

-விளம்பரம்-

Bigg-boss-task

Hindi bigg boss

ஏற்கனவே இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்த்து பல விடயங்களை காப்பி அடித்துள்ளனர். அதில் தற்போது தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும் பிக் பாஸ் சிறையும் ஒன்று. ஆனால், இந்த சிறையை ஆரம்பத்தில் மட்டுமே பயன்படுத்தினர் அதன் பின்னர் இந்த சிறை இருக்கும் இடத்தை கூட சரியாக கட்டுவது இல்லை.

இப்படி அனைத்தையுமே இந்தி நிகழ்ச்சியில் பார்த்து அப்படியே காப்பி அடித்து அதனை பயன்படுத்தி வருகின்றனர் தமிழ் பிக் பாஸ் குழு. இதனால் இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்த்துள்ள ரசிகர்கள் அனைவரும் இது இந்தி பிக் பாஸ் காப்பி தானே என்று கிண்டலடித்து வருகின்றனர். இருக்குற கொஞ்ச நாளைக்காவது சொந்தமா யோசிங்க பிக் பாஸ்.

Advertisement