நடிகர் சூரியின் அம்மா உணவகத்தில் வணிகவரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி சூரிக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டிருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் சூரி. இவர் சின்னத்திரை சீரியலில் தனது பயணத்தை துவங்கி தற்போது தமிழ் சினிமா உலகில் பிரபலமான காமெடி நடிகராக விளங்கி வருகிறார்.
இவர் சுசீந்திரன் இயக்கத்தில் வெளிவந்த ‘வெண்ணிலா கபடி குழு’ என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமா உலகில் அறிமுகமாகி இருந்தார். இந்த படத்தில் இருந்து இவரை பலரும் பரோட்டா சூரி என்று தான் செல்லமாக அலைகிறார்கள். சூரி ஆங்கிலத்தில் அடிக்கடி பிழையாக பேசும் ஒரு புது யுத்தியை பயன்படுத்தி காமெடியில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்துள்ளார். இவர் தமிழில் உள்ள முன்னணி நடிகர்களான ரஜினி, விஜய், அஜித், சூர்யா என்று பல்வேறு நடிகர்களின் படத்தில் காமெடி நடிகராக நடித்து இருக்கிறார்.
இதையும் பாருங்க : மற்ற 4 மொழிகளில் ‘நாராயணா’ தமிழில் மட்டும் ‘ஐயயோ’ – ட்ரைலரில் இடம்பெற்ற வசன சர்ச்சைக்கு மணிரத்னம் அளித்த விளக்கம்.
சூரியின் திரைப்பயணம்:
சமீபத்தில் சூர்யா நடிப்பில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்ற எதற்கும் துணிந்தவன் படத்தில் சூரி நடித்து இருக்கிறார். அதனை தொடர்ந்து சிவகார்த்திகேயனின் டான் படத்திலும் இவருடைய காமெடி மக்கள் மத்தியில் வரவேற்கப்பட்டு இருக்கிறது. அதேபோல் விருமன் படத்திலும் சூரி நடித்து இருந்தார். இப்படி தொடர்ந்து காமெடி கதாபாத்திரத்தில் நடித்து வந்த சூரி தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். இவர் இந்த படத்திற்காக படு பிட்டாக இருக்கிறார். இந்த படத்திற்கு “விடுதலை” என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
விடுதலை படம்:
RS Infotainment தயாரிப்பாளர் எல்ரெட் குமார் இந்த படத்தை தயாரித்து வருகிறார். இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். இந்த படம் கூடிய விரைவில் வெளியாக உள்ளது. இது ஒரு பக்கம் இருக்க, இவர் மதுரையில் அம்மன் உணவகம் என்ற பெயரில் ஹோட்டல் நடத்தி வருகிறார். மதுரை தெப்பக்குளம், அரசு மருத்துவமனை, ரிசர்வ் லைன்ஸ் சந்திப்பு, ஊமச்சிக்குளம் போன்ற பல இடங்களில் அம்மன் என்ற பெயரில் உணவகங்கள் இருக்கின்றது. அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை வளாகத்தில் தன்னுடைய அடுத்த கிளையை துவங்கினார்.
சூரி மீது மக்கள் கொடுத்த புகார்:
இந்த உணவகத்தை அமைச்சர் பி டி ஆர் தான் திறந்து வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மக்கள் கூட்டமும் அதிகமாகவே இருக்கும் இந்த ஓட்டல்களின் தலைமையகம் மதுரை காமராஜர் சால தெப்பக்குளம் அருகே உள்ளது அம்மன் உணவகம். இந்நிலையில் நேற்று மாலை திடீரென்று அம்மன் உணவகத்தில் வணிகவரித்துறையினர் சோதனை நடத்தி இருந்தார்கள். இந்த சோதனையின் போது முக்கிய ஆவணங்களை அவர்கள் இருக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் ஜிஎஸ்டி இல்லாமல் உணவுக்கான கட்டணத்தை வசூலிப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியிருந்தார்கள்.
வணிகவரித்துறை அனுப்பிய நோட்டீஸ்:
அதன் அடிப்படையில் தான் சோதனை நடத்தப்பட்டிருந்தது. இங்கு உணவகங்களுக்கு மொத்தமாக கொள்முதல் செய்த உணவுப் பொருள்களுக்கு ஆவணங்கள் இல்லை என்பது தெரியவந்தது. மேலும், ஜிஎஸ்டி இல்லாமல் கட்டணம் வசூலிப்பதும் தெரிய வந்தது. இதை அடுத்து சூரி மீது எழுந்த புகாருக்கு 15 நாட்களுக்கு நேரில் ஆஜராகி விளக்கம் கொடுக்க வேண்டும் என்று வணிகவரித்துறை நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. மேலும், சூரிக்கொடுக்கும் விளக்கத்தை அதிகாரிகள் ஏற்றுக் கொள்ள முடியாத நிலையில் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.