வைரலாகி சாதனை படைக்கும் மெர்சல் படத்தின் டீசர் போஸ்டர் !

0
1358
mersal

விஜய் நடித்துள்ள மெர்சல் படத்தை அட்லி இயக்கியுள்ளார். இந்தப் படத்தை தேனாண்டாள் ஃபிலிம்ஸ் தயாரித்துள்ளது. இந்தப் படத்தில் காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன், வடிவேல், எஸ்.ஜே.சூர்யா ஆகிய பெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது.

இந்தப் படத்தின் பாடல்கள் ஆகஸ்ட் 20-ம் தேதி வெளியாயின. படத்தின் டீசரை ரசிகர்கள் பெரும் ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் காத்திருந்தனர். அட்லியின் பிறந்தநாளான செப்டம்பர் 21-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் அதற்கு முன்னதாக டீசர் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

actor-vijay

அந்தப் போஸ்டரில் காளை மேல் விஜய் கை வைத்து நிற்க, அருகில் நித்யாமேனன் ஒரு குழந்தையைக் கையில் வைத்துக்கொண்டு உட்காந்திருக்கிறார். அந்த போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் வைராகி வருகிறது.

ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் செய்த டிவீட்க்கு 2 மணி நேரத்தில் 12,000 லைக் குவிந்துள்ளது. 76,000+ டிவீட்ஸ் வந்து ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகியுள்ளது !