எதிர் நீச்சல் சீரியல் இயக்குனர் மீது கண்டனம். ஆர்ப்பாட்டத்தில் இறங்கிய புகைப்பட கலைஞர்கள் – காரணம் இந்த காட்சி தான். வீடியோ இதோ.

0
1387
Ethirneechal
- Advertisement -

சின்னத்திரை இயக்குனர் திருச்செல்வம் புகைப்பட கலைஞர்களை இழிவுபடுத்தியதாக கூறி அவர் மீது கண்டனம் தெரிவித்து ஆர்பாட்டம் செய்து இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. மக்களின் பொழுது போக்கு அம்சங்களில் ஒன்றாக சின்னத்திரை சீரியல்கள் விளங்கி வருகிறது. எவ்வளவு சீரியல்கள் ஒளிபரப்பாகி இருந்தாலும் மக்களின் மனதில் நீங்கா இடம் பெற்ற சீரியல்கள் என்று சில மட்டுமே தான். அதுவும் 90 காலகட்டத்தில் வெளிவந்த சீரியல்கள் எல்லாம் இன்றும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கிறது. அதிலும் சீரியல் என்றாலே முதலில் அனைவருக்கும் ஞாபகம் வருவது சன் டிவி தான்.

-விளம்பரம்-

அந்தளவிற்கு சன் டிவி சீரியல்கள் மக்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. வெள்ளித்திரையில் பிரபலமான நடிகைகள் பலர் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சீரியலில் ஜொலித்து இருக்கிறார்கள். கோலங்கள் தேவயானி, தங்கம் ரம்யா கிருஷ்ணன், சித்தி ராதிகா என்று பல முன்னணி நடிகைகள் சீரியலில் நடித்து இருக்கிறார்கள். இந்த அளவிற்கு சீரியல்கள் மக்கள் மத்தியில் பிரபலம் ஆவதற்கு காரணம் சீரியல் இயக்கும் இயக்குனர்கள். அந்த வகையில் சின்னத்திரை சீரியல் இயக்குனர்களில் மிகவும் பிரபலமான இயக்குனராக திகழ்பவர் திருச்செல்வம்.

- Advertisement -

திருசெல்வம் பற்றிய தகவல்:

இவர் தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்தவர். இவர் ஆரம்பத்தில் டப்பிங் தியேட்டரிலும், இளையராஜா மியூசிக் கம்போஸ் செய்யும் ஒலிப்பதிவு கூடத்திலும் பணிபுரிந்து வந்தார். பின் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி என்று பல மொழிகளில் தயாரான நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் சவுண்ட் என்ஜினியராக பணியாற்றினார். அதற்குப் பிறகு தான் சின்னத்திரையில் சீரியல்களை இயக்கும் பணியில் இறங்கினார். இவர் முதன்முதலாக 2002 ஆம் ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பாகி சூப்பர் ஹிட் கொடுத்த மெட்டி ஒலி என்ற தொடரில் இணை இயக்குனராக பணியாற்றினார்.

திருசெல்வம் இயக்கிய சீரியல்கள்:

அந்த தொடரின் மூலம் நடிகராகவும் அறிமுகமானார். அதற்கு பிறகு கோலங்கள் என்ற தொடரை இயக்கி சின்னத்திரை இயக்குனராக மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார். இந்த தொடர் மிக பெரிய அளவில் ஹிட் கொடுத்தது. அதோடு இந்த தொடருக்காக பல விருதுகள் வாங்கி இருக்கிறார் திருச்செல்வம். இதனை தொடர்ந்து அல்லி ராஜ்ஜியம், மாதவி, பொக்கிஷம், சித்திரம் பேசுதடி, கைராசி குடும்பம் போன்ற பல சூப்பர் ஹிட் சீரியல்களை திருச்செல்வம் இயக்கி இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் இவர் இயக்கிய சீரியலில் நடித்தும் இருக்கிறார். மேலும், திருச்செல்வம் சீரியல் இல்லத்தரசிகளின் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கிறது.

-விளம்பரம்-

இயக்குனர் திருச்செல்வம் மீது கண்டனம்:

அதற்கு காரணம் இவர் இயக்கும் சீரியல் பெரும்பாலும் பெண்களின் வாழ்வை மையமாகக் கொண்ட கதைகளாக அமைந்திருக்கும். இந்நிலையில் இவர் மீண்டும் தன்னுடைய சீரியல் அத்தியாயத்தை தொடங்கி உள்ளார். தற்போது இவர் சன் டிவியில் எதிர்நீச்சல் என்ற சீரியலை இயக்கி வருகிறார். அப்பா மற்றும் மகள் இருவருக்கும் இடையில் நடக்கும் பாசப் போராட்டத்தை மையமாகக் கொண்டதாக எதிர்நீச்சல் உள்ளது. இந்த தொடர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் இந்த தொடரில் கடந்த வாரம் புகைப்படக்கலைஞர் ஒருவரை மற்றொரு நபர் ஒருமையில் திட்டும் வகையில் புகைப்பட தொழிலை கொச்சைப்படுத்துவது போன்ற காட்சி ஒளிபரப்பாகி இருந்தது.

ஆர்ப்பாட்டத்தில் இறக்கிய போட்டோ மற்றும் வீடியோ கிராபர் சங்கம்:

இதையடுத்து தமிழ்நாடு போட்டோ மற்றும் வீடியோ கிராபர் சங்கம் சார்பில் வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு இருந்தார்கள். மேலும், இயக்குனர் திருச்செல்வம் மற்றும் நடிகர் மாரிமுத்து ஆகிய இருவரும் வெளிப்படையாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இந்நிலையில் இது குறித்து இயக்குனர் திருச்செல்வத்திடம் தொடர்புகொண்டு கேட்டபோது அவர் எந்த ஒரு பதிலும் விளக்கமும் கொடுக்கவில்லை என்று புகைப்பட கலைஞர்கள் தெரிவிக்கின்றனர். அதுமட்டுமில்லாமல் திருச்செல்வம் மன்னிப்பு கேட்கும் வரை நாங்கள் ஓயமாட்டோம் என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தற்போது இந்த தகவல் சின்னத்திரை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Advertisement