விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த ஜெயம் ரவி பட வில்லன்.! மருத்துவமனையில் சிகிச்சை.!

0
844
Gopichand
- Advertisement -

தமிழில் கடந்த 2002 ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ‘ஜெயம்’ படத்தில் வில்லனாக நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் நடிகர் கோபிசந்த். அதன் பின்னர் தமிழில் இவர் வேறு எந்த படத்திலும் காண முடியவில்லை.

-விளம்பரம்-

இருப்பினும் தெலுங்கில் முன்னணி கதாநாயகனாக இருந்து வருகிறார். இவர் நடித்த ஒரு சிலப்படங்கள் சூப்பர் ஹிட் அடைந்துள்ளது. தற்போது பெயரிடப்படாத தெலுங்கு படமொன்றில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

- Advertisement -

இந்த படத்தின் முக்கிய காட்சிகளை ஜெய்ப்பூர் அருகே உள்ள மண்ட்வாவில் படமாக்கி வந்தனர். கோபிசந்த் மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்று வில்லன்களுடன் மோதுவதுபோல் காட்சியை எடுத்தனர். இதை 3 கேமராக்கள் வைத்து படமாக்கி கொண்டு இருந்தார்கள்.

அப்போது மோட்டார் சைக்கிளை வேகமாக ஓட்டிச்சென்ற கோபிசந்த் திடீரென்று பைக்கில் இருந்து கீழே தவறி விழுந்தார்.
இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக கோபிசந்தை மீட்டு அருகில் இருந்த தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

-விளம்பரம்-
Advertisement