தான் கர்ப்பமாக இருப்பதை குறித்து பேசிய பிரியங்கா சோப்ரா.!

0
575
Priyanka-Chopra

பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா பல ஆண்டுகளாக ஹிந்தி சினிமாவில் முடி சூடா ராணியாக இருந்து வருகிறார். மிஸ் இந்தியா ஆகியன இவர் பல ஆண்டுகளாக இந்திய சினிமாவில் கலக்கி வந்தார். மேலும் இந்திய சினிமாவை தாண்டி ஹாலிவுட் வரை சென்று தனது திறமையை நிரூபித்து காட்டியவர். சில வருடங்களாக ஹோலிவுட்டில் செட்டில் ஆகிவிட்டார்.

Priyankachoprawedding

மாடல் அழகியாக இருந்து பின்னர் இந்தி சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக விளங்கி வருகிறார் நடிகை பிரியங்கா சோப்ரா. விஜயுடன் ‘தமிழன்’ படத்தில் நடித்த இவர் தன்னை தன்னை விட வயதில் குறைவான நிக் ஜோனஸ் என்ற நபரை காதலித்து திருமணம்செய்துகொண்டார்.

- Advertisement -

திருமணமாகி ஒரு சில மாதங்களே ஆன நிலையில் ரசிகர்களுக்கு அதிர்ச்சி தந்திருக்கிறார் பிரியங்கா. சமீபத்தில் பிரியங்கா நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அப்போது அவரது வயிறு பெரிதாகி இருப்பதுபோல் தெரிந்ததால் பிரியங்கா கர்ப்பமாக இருப்பதாக நெட்டில் வைரலாக தகவல் பரவியது. 

முன்னதாக, நிக் ஜோன்ஸூடன் விரைவில் குழந்தை பெற்றுக் கொள்ள ஆசையாக உள்ளது என்று டுவிட்டரில் பிரியங்கா கருத்து வெளியிட்டிருந்தார். அதனால், பிரியங்கா கர்ப்பமாக உள்ளார் என்பதை, ரசிகர்கள் உறுதிசெய்து விஷயத்தை ஊதி பெருசுபடுத்தி வருகின்றனர். இந்த தகவலுக்கு பதில் அளித்த பிரியங்கா கடுமையாக சாடியுள்ளார். இதுபற்றி அவர் கூறும்போது, ‘இப்படி ஆயிரக்கணக்கான  அர்த்தமில்லாத கேள்விகளுக்கு பதிலளித்து அலுத்துவிட்டேன்’ என்றார். 

பிரியங்காவின் தாயார் மதுசோப்ரா அளித்த பதிலில், ‘குறிப்பிட்ட  புகைப்படம் மட்டும் சரியான கோணத்தில் எடுக்கப்படவில்லை, அதனால்தான் அந்த புகைப் படத்தில் பிரியங்கா வயிறு பெரிதாக தெரிகிறது. மற்ற படங்களில் அப்படி இல்லை,  பிரியங்கா கர்ப்பம் என்ற  தகவல் வதந்திதான்’ என்றார்.