தமிழில் ஆறு, உத்தமபுத்திரன் போன்ற படங்களில் நடித்த பிரபல தெலுங்கு நடிகர் ஜெயப்ரகாஷ் ரெட்டி காலமாகியுள்ள சம்பவம் திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 1946 ஆம் ஆண்டு ஆந்திராவில் பிறந்த இவர் 1988 ஆம் ஆண்டு வெளியான பிரம்மபுத்ரா படத்தின் மூலம் அறிமுகமானார். இவருக்கு மிகப்பெரிய பிரபலத்தை ஏற்படுத்திக் கொடுத்தது 1999 ஆம் ஆண்டு வெளியான சமரசிம்மா ரெட்டி என்ற திரைப்படம் தான். அதன் பின்னர் தெலுங்கில் வில்லனாகவும், காமெடியனாகவும் நடித்து தெலுங்கு ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.

அதன் பின்னர் தெலுங்கில் பல்வேறு படங்களில் நடித்த இவர் தமிழில் அறிமுகமானது என்னவோ 2003 ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான ‘அஞ்சினேயா’ படத்தின் மூலம் தான். அந்த படத்தில் வில்லனாக நடித்த பின்னர் 2005 ஆம் ஆண்டு சூர்யா நடிப்பில் வெளியான ஆறு படத்தில் கூட வில்லனாக நடித்து இருந்தார்.

Advertisement

ஆஞ்சநேயா படத்தின் மூலம் இவர் தமிழில் அறிமுகமாகி இருந்தாலும் இவருக்கும் மிகப்பெரிய பிரபலத்தை ஏற்படுத்தி கொடுத்தது என்னவோ சூர்யா நடிப்பில் வெளியான ஆறு படத்தின் மூலம் தான். இந்த படத்தில் ரெட்டி என்ற கதாபாத்திரத்தில் வந்து தனது வில்லத்தனமான நடிப்பை வெளிப்படுத்திய இவர் தனுஷ் நடிப்பில் வெளியான ‘உத்தமபுத்திரன்’ படத்தில் அப்படியே நேர் எதிராக காமெடியான கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி இருந்தார்.

இந்நிலையில், இன்று காலை அவர் மாரடைப்பால் காலமானார். அவரது இறப்பு திரைத்துறையினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள நிலையில், பலரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் நடிகர் ஜெய் பிரகாஷ் கழிவறை சென்ற போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தாக சமூக வலைதளத்தில் செய்தி ஒன்று வைரலாக பிறவி வருகிறது. மேலும், கழிவறையில் பிணமாக கிடந்த ஜெய் பிரகாஷ்ஷின் வீடியோ ஒன்றும் வைரலாகி வருகிறது.

Advertisement
Advertisement